
காலைல இருந்து ஏர் புடிக்க ஆள் தேடுறேன்... தக்காளி எவனுமே சிக்கல...
சரி நம்ம சின்ராசு பயபுள்ள எங்காவது இருந்தான்னா புடிச்சிட்டுப்போயி உழவு ஓட்டலாம்னா.........
தேடிப் போன தேனு தெருவுல வந்தா மாதிரி, என்னோட எதிருல சின்ராசு.....
“எலேய்! எங்களே போற?” இது நான்....
“அதெப்பூடி அவன் பதவி வெலகுவான்?
மந்திரின்னா மக்கள் சொல்றத மட்டுமே கேக்கணுமா?
என்னையெல்லாம் பாத்தா டம்மி பீசா தெரியுதா?
நான் சொல்றேன், அவன் பதவி வெலக மாட்டான்.” இது சின்ராசு.....
“எலேய் சின்ராசு! என்னடா ஒளரிட்டு இருக்குற?”
“டேய்... என்னையெல்லாம் பாத்தா டம்மியா தெரியுதா? நான் யாருக்கும் கைப்பாவை இல்லை”
“எலேய்! எதுவும் பாக்கக்கூடாதத பாத்து பயந்துட்டியோ? இப்புடி ஒளர்ற?”
“இவன் வந்து என்னைப் பாத்ததுக்கும், அவன் பதவி வெலகரதப் பத்தி பேசருதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”
“ஆஹா... காலைலயே மப்பு போட்டுட்டியோ?” நெசமாகவே சந்தேகத்தோடதான் கேட்டேன்.
“அதில் அவன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது”
“எலேய்... எம்பட கேள்விக்கு பதில் கேட்டா, நீபாட்டுக்கு என்னென்னமோ ஒளரிட்டு இருக்க?”
“இல்லை... இல்லை.....நாந்தான் பிரதமர். நான் பதவி விலக மாட்டேன்..”
ஐயையோ!
சின்ராசுக்கு எதுவோ எங்கியோ கடிச்சு வச்சிருச்சுங்க....
நல்ல மருந்து எதுனா இருந்தா சொல்லுங்கப்பு!
பாவம் நல்ல ஆளு, பாவம் நல்ல ஆளு....
சேரக்கூடாத எடத்துல சேந்துபுட்டாரு....
அதுக்கு நாம என்ன பண்ணுறது?
எங்களுக்குத் தேவை 32 ரூவாயில ஒரு நாளைக்கு சோறு.....
வாழ்க சனநாயகம்.....
வெளங்காதவன்.