இணைப்பில்

Showing posts with label ஒண்ணுமில்ல. Show all posts
Showing posts with label ஒண்ணுமில்ல. Show all posts

Thursday, November 7, 2013

Writer அதாவது எழுத்தாளர்



மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர். தமிழில் மட்டும் முப்பது புத்தகங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார். இந்த முப்பது புத்தகங்களையும், தன் முப்பது வயதிற்குள் எழுதிமுடித்திருக்கிறார். உலக மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழ் மொழியிலிருந்து உலகமொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வது அவருக்குக் கைவந்த கலை.

அவரின் தோற்றத்தையோ, உடையின் நிறத்தையோ, போட்டிருக்கும் கண்ணாடியின் விலையையோ உங்களுக்கு நான் கூறப்போவதில்லை. அவ்வாறு கூறி, கதையின் பக்க அளவை நீட்டி முழக்குவதில் எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை.

கதையென்றால் அதன் போக்கில் எழுதவேண்டுமென்று எகிப்திய எழுத்தாளர் முஷ்கர் டி சொல்லுவார். முஷ்கர் அல்லது டி எழுதியவையனைத்தும் ஆகச்சிறந்த இலக்கிய முத்துக்கள். முஷ்கருடைய படைப்புகளில், தேவையின்றி ஒரு காற்புள்ளியோ, இல்லை அரைப்புள்ளியோ இடம்பெறாது. ஒரு சிற்பி, சிலையைச் செதுக்குவதுபோல் பார்த்துப் பார்த்து இலக்கியம் படைத்தவர்.

அவரின் மரணமும், மிகச் சுவாரஸ்யமான ஒன்று. சாவில் என்ன சுவாரஸ்யமென்று கேட்காதீர். அவருடைய எழுத்தைப்போலவே, அவரது மரணமும் இலக்கியத்தனமானதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தன் அறுபதாவது வயதில், தன் மூன்றாம் மனைவியுடன் கட்டிலின்பம் பெறும்போது உயிர் போய்விட்டதாம். கேட்கும்போதே “உச்” கொட்டத் தோன்றுகிறதா? கொட்டிவிடுங்கள்.

ஐயடா... 

நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை முஷ்கர் டி யைப் பற்றியதல்ல. இக்கதை நம் தமிழ் எழுத்தாளர் பற்றியது. நாற்பது வயதைக் கொஞ்சம் நரையுடன் நெருங்கிக்கொண்டிருக்கிறார். முன்பொருகாலத்தில் மீசை வைத்திருந்தார். இப்போதெல்லாம், மீசையை மழித்துவிடுவார் போலும்.

இதோ, கதையின் கருவுக்கே திரும்பிவிடுவோம்.

ஆம், நம் எழுத்தாளர் மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

அவரின் திருமணத்துக்கு முன்புவரை, இலக்கியம், உரை, பத்தி என விரிந்த எழுத்துக்கள், இப்போதெல்லாம் மளிகைக் கணக்கு, வரவு செலவுக் கணக்குகள், குழந்தையின் வீட்டுப்பாடம் எனச் சுருங்கிப்போயிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.

அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான். அரக்கியாய் இருந்திருந்தால், மேலே சொன்ன மளிகை, வீட்டுப்பாடம் போன்றவற்றை எழுதத்தான் சொல்வாளா? பேனாவைக் கையிலேடுத்தாலே மூச்’சென்று கத்தியிருப்பாள். முடிந்தால், பூரிக்கட்டையால் அடித்தே, எழுத்தாளரின் கையை முறித்திருப்பார். அதனால்தான் சொல்கிறேன்,
”அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான்.” 

அவரது புத்தக வெளியீடுகள் எல்லாம், ஊரின் மீப்பெரும் உணவகங்களில் அல்லது கடலின் நடுவே அல்லது வானத்தில் பயணித்தபடியே அல்லது மலையின் உச்சியிலே அல்லது.....
இப்படி எங்கேனும் வித்தியாசமான இடங்களில் நடந்துகொண்டே இருக்கும்.
ஒருமுறை புளியமரத்தின் உச்சாணிக் கொம்பிலேறி வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான எழுத்தாளர்தான், மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆறு வருடங்களாக, அதாவது, திருமணத்துக்குப் பின், இலக்கியங்கள் படிப்பது சுத்தமாக நின்றேவிட்டது, அவர் எழுதுவதை நிறுத்தியதைப்போல். காரணம்தான் தெரியுமே. ஆம்....
அவரது சகதர்மினியேதான்.

இவர் அவளுக்குத் தெரியாமல் தினசரி கூட படிக்க முடியாத நிலை. அவருக்குப் பேனா வேண்டுமென்றால்கூட மனைவியிடம்தான் கேட்கவேண்டும்.

அவரது மனம், இப்போதெல்லாம் புழுப்போல நெளிந்துகொண்டிருக்கிறது. தெரிந்ததை எழுதமுடியாமல், தெரியாததைப் படிக்கமுடியாமல்.......
மக்களை அடிமைப்படுத்தும் முறைகளில் திருமணமும் ஒன்று. அதை எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டுமென புழுங்கிக்கொண்டிருக்கிறார். அடிமையின் ஓலமாக, அவரின் இயலாமை நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

நடைபிணமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

என்றேனும் ஒருநாள் அவர்தம் மனைவி அவரை வீட்டில் விடுத்துப் போகட்டும், அந்த நன்னாளிலாவது அவளின் கோலப் புத்தகத்தை, பிரஞ்ச்சில் மொழிபெயர்த்துவிட வேண்டுமென்று பொருமிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர்.

-வெளங்காதவன்.

Friday, July 27, 2012

மூணாவது வருஷம் வோய்!


வணக்கம்.

வெற்றிகரமா மூணாவது வருஷத்துல அடியெடுத்து வச்சுட்டான் வெளங்காதவன்.
05.07.2010ல் ஆரம்பிச்சு, 38 பதிவுகள் எழுதி நூறுக்கும் மேற்பட்ட பாலோயர்களைச் சம்பாதித்து இருக்கிறான்.
சுமார் ஐந்தாண்டுகாலமா (29.08.2008லிருந்து) பதிவுலகில் இருந்தாலும்(அது என்ன பிளாக்கு-னு கேக்கப்படாது), இந்த
வெளங்காதவன் என்ற முகமூடி சிறந்த நட்புகளையும் சம்பாத்தித்துக் கொடுத்துள்ளது.

என்னைச் சேத்தாம, 11,111 பேரு நேத்து வரைக்கும் பாத்து இருக்காங்கன்னு கம்பெனி சொல்லுது.

என்னமோ எழுதும்போது கொஞ்சம் சந்தோஷம் சந்தோசமா இருக்கு..

எங்க அப்பாரு சொல்லுவாரு, “நீ சொல்றத எல்லாம் எவன் கேப்பான்”னு.
ஆனா, நான் எழுதறதையும் படிச்சு காமண்டுற உங்க சகிப்புத்தன்மையைப் பாராட்டுற அதே நேரத்துல உங்களுக்கு நன்னியை உரித்தாக்குறேன்.

இந்த வெளங்காதவன் என்ற முகமூடி அணியக் காரணமான வெங்கட்க்கும் மங்குனி அமைச்சருக்கும் ஸ்பெஷல் நன்னி. இவிங்கதான் நம்ம கம்பெனிய திறந்து வச்சவங்க.

ஆங்., அப்புறம் நான் பதிவுலகில் மிகவும் மதிக்கும், தன் எழுத்தால் கட்டிப் போட்ட ஒரு நாலு தளங்கள் இருக்கு. ரியலி அவேசம்!
2.       Warrior
3.       பட்டாபட்டி (குருவே சரணம்)
4.       Sivaranjani Sathasivam

இவிங்க நல்லா எழுதராங்களா இல்லியான்னு தெரியாது. ஆனா, எனிக்கு ரெம்ப புடிக்கும்.

அப்புறம், என்னையெல்லாம் ஏண்டா மென்சன் பண்ணலைன்னு கேக்கும் அன்பர்களுக்கு,
“இவிங்கதாம்லே கரீட்ட அக்கவுண்டுல பணத்தைப் போட்டிருக்காங்க”.

ஆங்.

-வெளங்காதவன்.

Sunday, April 3, 2011

போங்கடா போக்கத்த பயலுகளா!

மானங்கெட்ட ஊருய்யா......

இங்க இருந்து உசிரு வாழுறதுக்கு, நம்ம பட்டாபட்டி மாதிரி சிங்கைல போயி பிச்சை எடுக்கலாம்.....

திருட்டுக் கிழங்களும், கூட்டுக் களவாணிகளும், உயர்மட்ட அம்மைகளும் சேந்து அரசியல் நாடகங்கள ஆரம்பிச்சுட்டாங்க!

ஏலே, சின்ராசு!

எல்லாம் இனாமாமே?

ங்#$%தா, சரக்கும் சைட் டிஷும் தவிர மத்ததெல்லாம் இனாம்.....

ஆனா ஒண்ணுலே, நம்பட்ட ஆட்டையப் போட்டத, கொஞ்சம்னாலும் திருப்பிக் கொடுப்பானுங்கனு ஒரு நம்பிக்கை இருக்குலே.......

ஆமா, கேக்க மறந்துட்டேன்ல,

வெங்காயம் கிலோ என்ன வெலை?

ராசா, ராசா னு ஒருத்த(ன்)ர் இருந்தாரே, ஞாபகம் இருக்கா?

2 ஜி அலைக்கற்றைனா தெரியுமா?

ராமதாசு னு ஒரு மானஸ்தன், அந்தக் கட்சியோட கொள்கைகள் தெரியுமா?

ஊற்றிக் கொடுத்தவர்களுக்கும், குடித்தவர்களுக்கும் உறவு நிலை என்ன இப்போ?

ஏலே, சின்ராசு....

எங்கலே ஓடுத? பதில் சொல்லுலே.....

யோவ்.... சின்ராசு......

ஓடியே போயிட்டான் பயபுள்ள...




சரி சரி....

உங்களுக்கெல்லாம் சொல்லுறதுக்கு ஒரு மயிரும் மேட்டரும் இல்ல....

போய், ஓசில கெடைக்கிறத வாங்கிட்டு எவனுக்கோ ஓட்டுப் போட்டுட்டு, முடிஞ்சா அவங்களோட அடிய வருடி........................

போறதுக்கு முன்னாடி இன்னும் ஒண்ணு.....

கொஞ்சம் சோத்துல உப்பு சேர்த்துக்குங்க அப்பு!

டிஸ்கி:- ஆணி அதிகம்...... அடிக்கடி வர முடியல....... அப்பப்போ வாறேன்...

இந்தப் பதிவு, அனைத்து தமிழக வாக்காளர்களுக்குச் சமர்ப்பணம்.


--வெளங்காதவன்.