இணைப்பில்

Friday, July 22, 2011

கலீங்கருக்கும் மக்கள்தொகை பெருக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?- ஆராய்ச்சி கட்டுரை.


வணக்கம் அப்பு!

வெகுநாளா பில்கேட்ஸ் கிட்ட பில் கொடுக்க மாடு மேய்க்கப் போயிட்டேன்.

ஆட்சி மாறிப்போச்சு.... மழைமாரி வந்து வந்து போகுது.....அம்மையும் கோட்டைக்கு மாறியாச்சு...

டாஸ்மாக்ல சரக்கு வெலைய ஏத்திட்டாங்கலாம்.(துரோகிங்க!)

இதுக்காகவே, ஆளுங்கட்சிக்கு வெளியில இருந்து ஆதரவு தர திட்டமிட்டுருக்காராம் கேப்டன்.


இந்த எழவையெல்லாம் கேட்டு, இதயம் துடிப்பது அதிகமாயிடுச்சு....

அம்மையை ஜெயிக்க வைத்து, கொள்கை(ளை)க் கூட்டத் தலைவரை, அரியணைஏற்றாமல் விட்ட மூடர்களுக்காக இந்தப் பதிவு.....

தலைவரை என்னவென்று நினைத்தீர்கள்? நிமிர்ந்த நடை(பத்து பதனஞ்சு வருஷத்துக்கு முன்னால்) நேர் கொண்ட பார்வையும், எழுத்தாளுமையும், சொல்லாற்றலும் கைவரப் பெற்ற, எங்க அண்ணாவின் தம்பி, தங்கக்கம்பி டாகுடர்.கலீங்கர் தன் ஆட்சிக்கால சாதனைகள், வேறு எந்த ஆட்சியிலும் படைக்கவில்லை. ஏன், படிக்கவும் படைக்கவும் முடியாது.

“2G எல்லாம் சென்ட்ரல் கவர்மெண்ட் பிரச்சினை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்... தமிழக வாக்காளர்கள் புரிந்துகொள்ளாததால் தோற்றுவிட்டேன்” என்று எனக்குக் கடிதம் எழுதினார் என்றால் அது மிகையாகாது...

ஆதலால் மக்களே, இந்த ஆட்சியில் ஓடும் தேன், பால் போன்றவற்றை அருந்திவிட்டு, பிறகு சொல்லுங்கள் அவரது ஆட்சியின் குறைகளை...

ஆங்... அப்புறம் நித்திய கடாட்சம் பொருந்திய மேட்டருக்கு வருவம்.....

கலீங்கருக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?’னு நம்ம சின்ராசு கேட்டு வச்சான்....

ஒரு எழவும் வெளங்கல... பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருந்தேன்...

அங்கவந்த மங்குனிகிட்டயும் கேட்டேன். மந்தகாசப் புன்னைகையுடன் அவர் அளித்த பதில்,

“மங்குனி-கரண்டு கட்டு எப்போ ஸ்டார்ட் ஆச்சு?

நான்- கலீங்கர் பீரிடுல

மங்குனி- அதுவும் நைட்-லயும் கட் ஆச்சா?

நான்- ஆமா, ஆமா.

மங்குனி- அதனாலதான் சொல்றாங்க, மக்கள் தொகைப்பெருக்கத்துக்கு கலீங்கர் காரணும்னு.

நான்- ????!!!!!!

டிஸ்கி- அடப் போங்கய்யா..... ஒண்ணுமில்லை.

-வெளங்காதவன்.