இணைப்பில்

Tuesday, December 20, 2011

என்னமோ போங்க...


சார்!!
கழிசடைங்க சார்!!!!

நான் அப்பவே உன்னாண்ட சொன்னனில்ல சார்?
எங்க தலீவர தலைமைல இருந்து தூக்குனா அப்புடித்தான் நடக்கும்னு.

என்னது? அது மத்திய சர்க்காரா? எங்க தலீவரோட பவர், செனட் வரைக்கும் செல்லும் சார்...

சரி, நான் என் இப்புடி நத்தம் வர்ற வரைக்கும் கீறுறேன்னு பாக்குறியலா?
அது ஒண்ணுமில்ல சார்!!!! 

நம்ம புதுத் தலீவரு, யானைதேசிகன் தலமைல கூடுன, கூட்டத்துல, நம்ம மந்திரி பேசுன பேச்சு!! அதப்பத்திதேன் சொல்ல வாரேன்.........

அடேங்கப்பா!!! எனக்கு மப்பு ஓவரா போயிட்டா வாந்தி எடுப்பேன் சார்.. சத்தியமா வாந்தி எடுப்பேன்...

ஆனா, எடுத்த வாந்தி தப்புன்னு சொல்லி அதையவே முழுங்க மாட்டேன் சார், நம்ம மந்திரி பண்ணுன மாதிரி..   

ஆங்... சொல்ல மறந்துட்டேன்... அந்த மந்திரி அடுத்த எலக்சன்ல கேராளவுல எம்.பி. போஸ்டுக்கு நிக்கிறமாதிரி கேள்விப்பட்டேன்.. பாத்து குத்துங்கப்பு!!!
***********************************************************************************
ஜெ.ஜெ. மேடம்...
குஜாலாகீது....

நீ உன்னோட பார்ட்னர தூக்கிட்டு தனியாக்கீன்ற போது சந்தோசமாக்கீது....

ஆனா ஒண்ணு, நீ சம்பாதிக்கவேண்டியத எல்லாம் அவிங்க சம்பாதிச்சுட்டாங்க....

பொறவு,

நீ தொரத்திவுட்டது நாடகம்னு தெரியாம நெறைய வெங்காயங்க பொழம்புது... 

தொலையட்டும்...

அப்புடியே, அந்த பாலு வெலைய இன்னும் பத்துரூவா ஏத்தும்மா!!

உனக்கு, என்னோட தலைமுறையே கடமைப்படும்...

அப்புறம், நீ உள்ள போறதுக்கு முந்தியே சொல்லிடு, அடுத்த மொதலு யாருன்னு....
*************************************************************************************

எந்த டேமு எவனுக்கோ போவட்டும் சார்.. எந்த உலையும் என்னவேணா ஆவட்டும் சார்... 

இன்னிக்கு என்னோட குறிக்கோளு தேங்கா வெலை எட்டு ரூவா ஆவணும்.... அதேன் சார்...

நீ தி.மு.க., அ.தி.மு.க.ன்னு அடுச்சுக்க!!! ஆனா, எல்லா ஆட்சியலையும் மிடாஸ் சரக்குத்தேன் வாங்கணும் சார்!!!!




வழக்கம்போல அதேதான்.....

வாழ்க ஜனநாயகம்...

-     
   -    வெளங்காதவன்..

Friday, December 16, 2011

சொன்னாங்கோ...

யாராரோ என்னமோ சொன்னாங்கோ....

நல்ல கேளுங்கோ....

@
கனிமொழி

ராசா கைய வெச்சா.. அது ராங்கா...

திமுக மீது எந்தக்குற்றமும் இல்லை என்பதை நிரூபிக்க இது போன்ற ஆய்வு நடவடிக்கைகள் அவசியம்.   ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக தனது தூய்மையை மெய்ப்பிக்கும்.  விசாரணைகளுக்கு திமுக எதிரானது அல்ல என்பதை இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுக்கிறது.   சிபிஐ விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைக்க தயார்.  இந்த விவகாரத்தால் எந்த வகையிலும் திமுக-காங்கிரஸ் உறவு பாதிக்காது.



ஹா..ஹா... கலைஞர் மகள்னா கொக்கா?.. அப்படி போடுக்கா அருவாளை..
இந்த முட்டாப்பயலுக..அதாங்கா..நம்ம  நாட்டுமக்கள்..  ஹி..ஹி அவர்களின் முன்னேறத்துக்காக, தன் குடும்பத்தையே அர்பணித்த கலைஞரை(?),
சீண்டிப்பார்க்கிறாங்க.. விடாதீங்கங்கா...

அக்கா.. உங்கள் ஆங்கிலம் அருமை.. அதைவிட, ராசாவின் ஆங்கிலமும் ஓகோ..ஆகா..   நீங்க ரெண்டு பேரும் மேடையில சேர்ந்து நின்னு பேசனும். அதை நாங்க வாய் பிளந்துட்டு பார்க்கனும்.. அதான் இந்த ஏழை வாக்காளானின் ஆசைக்கா..
 
மணி எனக்கு, கனி உனக்கு..யாரோ சொன்னாங்களாமே.. அப்படீனா என்னாக்கா?..


=======================================================================


@
தங்கபாலு

ஓய்..அங்க பாரு- .உங்க அன்னை.


ஊழலுக்கு காங்கிரஸ் எதிரானது. ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனேயே பதவியிலிருந்து மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா செய்தார். இதுபோல பல உதாரணங்களை கூறலாம். ஊழலுக்கு துணை போக மாட்டோம். உண்மை நிலை தெரியும் வரை ஒருவரை குற்றம்சாட்டுவது தவறு. குற்றச்சாட்டு வந்தவுடனேயே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. அது சரியானதல்ல.




எங்களை பெற்றெடுத்தது(?) அன்னை சோனியா. அவர் காலடி மண்ணெடுத்து, அவரது அடிவருட்டும் வரை,   ஊண் உறக்கம் இன்றி பாடுபடுவோம்.
ராகுல்.... அன்னை பெற்றெடுத்த வைரம்’.   அவரையும்அவரது இன்நாள்காதலியையும், ஆட்சிப்பீடத்தில ஏற்றும்வரை, மலம்கூட கழிப்பதில்லை என சூழுரைக்கின்றேன்.
ஏண்ணே. இதெல்லாம் விட்டுட்டீங்க...போங்கண்ணே.. வயசானா, எல்லாம் மறந்துட்டு வருது..


=======================================================================

@
கலீங்கர்

உம்..இன்னைக்காவது முடி வெட்டனும்.
அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் ரூ. 600 கோடி அவரது பாட்டி வாங்கினார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை நிரூபிக்கத் தயாரா? இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?
//






ரைட்..ரைட்..ரெண்டு நாளா முரசொலில கடிதம் கூட எழுதாம , எங்க போய் தொல.. இருந்தீங்க?.
அறிஞர் அண்ணா இறந்தபோதுகூட விடாமல், கடிதம் எழுதிய கைகள், கட்டுண்டு கிடப்பதின் ரகசியம் என்னா தலை?...
கனியோ.. காயோ?. பழுத்தால் அழுகதான் செய்யும்...



=======================================================================




 @
அன்புமணி ராமதாஸ்
நாளை நமதே.. இந்த நாடும் நமதே...
 
பாமக துணை இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த 10 ஆண்டுகளில் புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாகத இளைஞர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவா புரட்சி, இதுவா முன்னேற்றம், இதுவா சமுதாய முன்னேற்றம். மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய தலைவர் இந்தியாவிலேயே ராமதாஸ் மட்டும்தான். அனைவருக்கும் இலவச கல்வி தர பாமக பாடுபடும் என்றார்.



விடுண்ணே..விடுண்ணே.. எதுக்குண்ணே 10 வருஷம்?..

அரசியல் குடும்பங்களும், வாரிசுகளும், சுருட்டும் வேகத்தை பார்த்தால்,( பார்த்தீங்களா.. கோவிச்சிக்கிரீங்க.. வாரிசுனு உங்களை சொல்வேனா?.. இது அவங்களைண்ணே..)  இன்னும் ரெண்டு வருஷத்தில் எல்லா பயலும், பிச்சை எடுக்கும் நிலைக்கு போயிடுவானுக.

அப்போது, கண்டிப்பா, இலவச கல்விதான் கொடுக்கவேண்டி வரும்...ஹி..ஹி..
நடத்துங்க..நடத்துங்க.. ஆமா..வரும் தேர்தலை, யார் வீட்ல கொண்டாடப்போறீக?...



=======================================================================

@இதெல்லாம் நாம...





.
மன்னன் வருவான்..   கதை சொல்லுவான்.
வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..

__________________________________________________________
டிஸ்கி1:- இந்தப் பதிவு, ஒரு பன்னாடைப் பதிவரின் பிளாக்கில் இருந்து திருடியது... இது முழுக்க முழுக்க அந்தப் பதிவரைப் பழி வாங்கும் நோக்கில் திருடி வெளியிடப்படுகிறது.....

டிஸ்கி2:- இந்த டிஸ்கி அந்தப் பதிவருக்கு..... "யோவ்... நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா?"

Wednesday, December 7, 2011

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்...

       "சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

      ஆக்கம் எவனோ உயிர்க்கு."

என்று கூறிய வள்ளுவனை வன்மையாகக் கண்டித்து, எனது உரையைத் தொடங்குகிறேன்.

வலையுலகில் சஞ்சரிக்கும் சராசரி தாண்டிய ஜீவன்களே!!!! நீங்கள் மத, இன துவேஷங்களைப் பரப்புகிறீர்கள். நீங்கள் செல்லும் பாதை சரியல்ல. இது போன்ற துவேஷங்களைத் தடை செய்யக்கோரி நாங்கள் சமூக வலைதளங்களைக் கண்டிக்கும் அதே வேளையில், அவர்களாகவே சென்சார் செய்து வெளியிட நிர்பந்திக்கிறோம். இல்லையெனில், எங்கள் அன்னை தலைமையிலான ஆட்சியில், அதற்காக விதிமுறைகளை உருவாக்குவோம்.

உண்மையைச் சொன்னால், மத இன துவேஷங்களைச் செய்வதாலே இதைச் செய்கிறோம் என எங்கள் கருத்துக்கு வரவேற்புத் தரும் அனைவருக்கும், இன்கம் டேக்சை குறைக்க வழிவகை செய்யும் சட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆனால், காமன்வெல்த் ஊழல், 2G ஊழல், கம்யூனிகேசன் இணைப்பு, சுரண்டல் இந்த வார்த்தைகளை உபயோகித்துச் செய்தி பரப்புபவர்கள் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளவும், சட்ட ஆலோசகர்களை வைத்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மேலும், முன்னணிப் பத்திரிகைகள் பல எங்களிடம் விலைபோயிவிட்டதால், இனி, இந்தியாவில் செயல்படும் பல சமூக வலைதலங்களையும் நமது கட்சியோ, அல்லது அரசோ வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விற்கத் தயங்கும் தள அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, தனி குண்டர் படை முடிக்கிவிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மீடியா என்ற கேட்டகிரியில் வரவே வராது; அது நட்பு வட்டம், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், கலை இவற்றையெல்லாம் தாண்டி டேட்டிங் வரை பறந்து விரிந்துள்ளது. இவ்வாறான, வலைகளில் அரசியல் பேசுவது குற்றம். அவ்வாறு பேசினாலும், எங்கள் பிரதமர், அன்னை போன்றோரைப் பற்றிய தவறான படங்களை வெளியிடுதல் மிகப்பெரும் குற்றம்.

இந்தியாவுக்கு இதற்கா சுதந்திரம் கொடுத்தான் வெள்ளையன்? இதற்காகவா மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு போன்றோர் பாடுபட்டனர்? இதற்காகவா நம் “காங்கிரஸ்” தோற்றுவிக்கப்பட்டது?

இல்லை.. இல்லை... இல்லவே இல்லை.....

ஆகவே, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க சமூக வலைகளில் நம் அரசின் தலையீடு அவசியமாகிறது. இது ஏன் எனக் கேட்கத்துடிக்கும், பா.ஜ.க. க்காரர்களிடம் கேட்கிறேன், “உங்களைப் பற்றிய அவதூறுகளை எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்வீர்?”. எனினும், நீங்கள் வெளியிடும் பவர் ஸ்டார், கேப்டன் மற்றும் அணில் போன்றோரின் படங்கள் சென்சார் இன்றி வெளியிடவும் ஆவண செய்யப்படும்.

ஒரே செய்தியை அழுத்திக் கூறுவதால், அது பொய்யாக இருக்குமோ என்று தொண்டர்கள் எண்ணுவது அச்சமாக இருக்கிறது. திரும்பத் திரும்பக் கூறுவது, அதன் அவசியத்தை வலியுறுத்தவே.

ஆனால், இந்தச் சமூக வலைதளங்களுக்கு என்னவொரு ஏளனம்? நாம் நடத்தும் ஆட்சியில், நமது கோட்பாடுகளை ஏற்காமல், “அமெரிக்காவில் எப்படியோ இங்கும் அப்படி” என்னும் ஏகாதிபத்திய மனநிலையில் அவர்கள் உள்ளனர். இவர்களையெல்லாம் தொண்டர்களாகிய நீங்கள் நினைப்பதுபோல் இம்மீடியட்டா ஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், பொதுக்குழு கூட்டி முடிவெடுப்போம்.

சமூக வலைத்தளங்களின் அராஜகம், நமது ஆட்சியில் ஒழியப்போகிறது என்று நினைத்தால், அனைத்து உறுப்புகளுள் சந்தோசத்தில் சிறகடித்துப் பறக்கின்றன.

ஆதலால், அனைத்து வலையுலக சஞ்சரிகளே!!!!

அன்னையின் தலைமையில் ஒன்றிணைவோம்...

எதிர்த்திடுவோம் அராஜகத்தை.....

ஒழித்திடுவோம் சமூக வலைத்தளங்களை!!!!!!!



வாழ்க ஜனநாயகம்.....

இங்ஙனம்,

அடிப்பொடி காங்கிரஸ் தொண்டன்,

வெளங்காதவன்.