இணைப்பில்

Tuesday, September 27, 2011

என்னதான் ஆச்சு?

<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4

காலைல இருந்து ஏர் புடிக்க ஆள் தேடுறேன்... தக்காளி எவனுமே சிக்கல...


சரி நம்ம சின்ராசு பயபுள்ள எங்காவது இருந்தான்னா புடிச்சிட்டுப்போயி உழவு ஓட்டலாம்னா.........


தேடிப் போன தேனு தெருவுல வந்தா மாதிரி, என்னோட எதிருல சின்ராசு.....


“எலேய்! எங்களே போற?” இது நான்....


“அதெப்பூடி அவன் பதவி வெலகுவான்?

மந்திரின்னா மக்கள் சொல்றத மட்டுமே கேக்கணுமா?

என்னையெல்லாம் பாத்தா டம்மி பீசா தெரியுதா?

நான் சொல்றேன், அவன் பதவி வெலக மாட்டான்.” இது சின்ராசு.....


“எலேய் சின்ராசு! என்னடா ஒளரிட்டு இருக்குற?”


“டேய்... என்னையெல்லாம் பாத்தா டம்மியா தெரியுதா? நான் யாருக்கும் கைப்பாவை இல்லை”


“எலேய்! எதுவும் பாக்கக்கூடாதத பாத்து பயந்துட்டியோ? இப்புடி ஒளர்ற?”


“இவன் வந்து என்னைப் பாத்ததுக்கும், அவன் பதவி வெலகரதப் பத்தி பேசருதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”


“ஆஹா... காலைலயே மப்பு போட்டுட்டியோ?” நெசமாகவே சந்தேகத்தோடதான் கேட்டேன்.


“அதில் அவன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது”


“எலேய்... எம்பட கேள்விக்கு பதில் கேட்டா, நீபாட்டுக்கு என்னென்னமோ ஒளரிட்டு இருக்க?”


“இல்லை... இல்லை.....நாந்தான் பிரதமர். நான் பதவி விலக மாட்டேன்..”


ஐயையோ!


சின்ராசுக்கு எதுவோ எங்கியோ கடிச்சு வச்சிருச்சுங்க....


நல்ல மருந்து எதுனா இருந்தா சொல்லுங்கப்பு!

பாவம் நல்ல ஆளு, பாவம் நல்ல ஆளு....

சேரக்கூடாத எடத்துல சேந்துபுட்டாரு....

அதுக்கு நாம என்ன பண்ணுறது?

எங்களுக்குத் தேவை 32 ரூவாயில ஒரு நாளைக்கு சோறு.....


வாழ்க சனநாயகம்.....


வெளங்காதவன்.

Sunday, September 25, 2011

ஆமாமா! அதேதான்!


மேதகு அன்னைஜி அவர்களுக்கு,

நமது கட்சியின் தளபதி( அவரு பேரு என்னையா? சீக்கிரம் சொல்லுங்க) “தொங்கபாலு” ஆதரவுடன், சேனாதிபதி “யுவராசு” அவர்களின் நல்லாசியுடன் வெளங்காதவன் எழுதிக்கறதுங்க...

நாஞ்சொகந்தேன்.... உங்க மேனி சொகத்த தெரிஞ்சுக்க ஒரு ஆச... அதேன் இந்தக் கடுதாசி!

வெளிநாடு போயி ஆப்பரேசன் பண்ணிட்டதா சொன்னாங்க... ஆத்தா! உனக்காக நான் போகாத கோயிலில்ல, வேண்டாத தெய்வமில்ல... மக்களைப் பெற்ற மகராசி, நீ திரும்பி வந்ததும்தான் போன உசுரு திரும்புச்சு........

அப்புறம் ராகுலு தம்பி, மேனகா அம்மணி எல்லாரும் சொகந்தானுங்களா?

நம்ம மாமா மன்மோகன் சிங்கு, ஐ.நா. சவை போயிருக்காருங்கலாமா? வந்தா கேட்டதாச் சொல்லுங்க...

தாயி, நம்ம ஊர்ல எலக்சன் கள கட்டிருச்சு..... எங்க, நம்ம கட்சியை வஞ்சித்த(??!) தி.மு.க. இல்ல, ஜான்சி மகராசிகூட கூட்டு வச்சிருமோன்னு பயந்துட்டு இருந்தேன்.... நீ எடுத்தியே தாயி, மக்காளாட்சி மலர, சனநாயகம் செழிக்க ஒரு முடிவு...

எனக்கெல்லாம், அதைக் கேட்டது கண்ணுல தண்ணி(ஆனந்தக் கண்ணீர் எனக் கொள்க) வந்திருச்சு ஆத்தா! நீ மேல பண்ணுன சாதனைகள, நம்ம விசுவாசிகள், அடிபொடிகள் நம்ம ஊருலயும் பண்ணனும் ஆத்தா! கழகங்கள் சுரண்டிய உள்ளாட்சி வளங்களை மீட்டெடுத்து தரணும் தாயே!

நீயும், தலீவரும் சேந்து பண்ணின(??!!), தமிழர்களுக்காகப் பண்ணின, பண்ணிக் கொண்டிருக்கிற(?!!) சாதனைகளை, இனிமேலும் பண்ணோ பண்ணுன்னு பண்ணிட தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்த விடிவெள்ளியே!

தமிழர்கள் மானமற்றவர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட அன்னையே! இலங்கைப்படுகொலைக்கும், மீனவர்கள் படுகொலைக்கும் தலைகூட ஆட்டாத அகில இந்திய அன்னையே!

வா... உள்ளாட்சித் தேர்தலிலே தனித்துப் போட்டியிட்டு, கட்சி வளர்ப்போம் வா!

இந்திராவின் மருமகளே வா!

ஆட்சி அமைத்திட வா!

-ஈழத்தை மறந்த உண்மைத் தமிழ் விசுவாசி,

வெளங்காதவன்.

மக்களுக்கு-

அப்பு,

நடந்ததெல்லாம் மறந்துவிட்டு, வேட்டியைத் தொடைவரை ஏற்றிக் கட்டி, கட்சி வளர்க்கப் பாடுபடுவோம்...

தங்கபாலு’வின் தலைமையில் ஒன்றிணைவோம்...

வென்றிடுவோம் தமிழகத்தை!

மன்னன் வருவான்,

கதை சொல்லுவான்,

காயடிப்பான்!
(வசன உதவி- பட்டாபட்டி, சிங்கை).

கடேசியா-

சத்தியமா சொல்றேன்யா! மானங்கெட்ட ஆளுங்கய்யா நாமெல்லாம்!


Saturday, September 24, 2011

ஐயோ குத்துதே! ஐய்யையோ குடையுதே!- பாகம் 3

முந்தைய பாகம்- இங்கே...


கரடிகள்-


வனமிருக்கும் நாடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், பனிக்கரடி என்னும் வெளிநாட்டு மிருகத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. விலங்குகள் பல ஒன்றிணைந்து சங்கங்கள் அமைத்தன. இதில் பெரியதும், முக்கியமனாதுமாகக் கருதப்படுவது கரடிகளும், சிங்கங்களும் அணிவகுத்த சங்கம் ஆகும். கரடிகள் சாணக்கியத்தனம் நிறைந்த அறிவோடும், சிங்கங்கள் நிரம்பப் பெற்ற வலிமையோடும் பனிக் கரடிகளை எதிர்த்து, போராடத் துணிந்தன.

போராட்டமென்றால் சாதாரணப் போராட்டமல்ல.....

அதைப் பற்றி எழுதினால் நீண்டுகொண்டே(???!!) போகுமாதலால், கரடிகளைப் பற்றிப் பார்ப்போம்....

சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் கரடிகள் அமர்ந்தன (அதிலும் சில குள்ளநரித்தனம் செய்துதான்). எப்படியோ, பனிக்கரடியும் நொந்து நூலாகி, அந்த நாட்டை கரடிகளிடம் விற்று விட்டுச் சென்றது.

அன்று முதல் இன்று வரை, அந்தக் கரடிகளும் நாடாண்டு வருகிறது.

இம்மலைவானத்துக்கும், கரடிகளுக்குமான தொடர்பு சுவாரஸ்யமானது. இவ்வனம், கரடிகளை நிரந்தரமாய் ஆதரித்ததும், எதிர்த்ததுமில்லை. கரடிகளும் இவ்வனத்தையும் ஒரு பொருட்டாக நினைத்தே ஆட்சி செய்தும் வந்தன.

இவ்வாறாக, கரடிகளும் வனமும் முகமுன் நட்புடனும், அகத்துள் விரோதித்தும் அதனதன் பாதையில் ஆண்டன/ ஆள்கின்றன.

இந்தக் குத்தலுக்கும் குடைச்சலுக்குமான காரணத்தையும் ஆராய்ந்தறிவோம்......

நாட்டை ஆளும் கரடிகளின் ஆட்சியில், இவ்வனத்தின் சுற்றத்தாருக்கும் பங்குண்டு. கூட்டு ஆட்சி... சன நாயகம்.

வனத்திற்கு ஏராளமான(???!!!) வாரிசுகளுண்டு.

வாரிசுகளில் ஒருவர்தான் குத்தலுக்கும் குடைச்சலுக்கும் காரணமென்பதை சொல்லவும் வேண்டுமோ?
***************************************************************************************
{சீரியசு-கோகுலத்தின் சூரியனின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தப் பதிவு அவசர அவசரமாக முடிக்கப்படுகிறது. “நேருக்கு நேர நின்று துகிலுரிக்க(பட்டா- ஜிந்தாபாத்) வேண்டு”மென்ற எந்தன் கொள்கையை பிராண்டி விட்டார்.... நன்னி}

சுச்கி- நான் சொல்ல வந்தது வேறேனினும், முழுவதையும் பதிவேற்ற ஒவ்வாமல் இப்போது நடையைக் கட்டுகிறேன். எதிர்காலத்தில் இந்தப் பதிவு தொடர்ந்தாலும் தொடரலாம்!!!!!

வெச்கி- எத்தன தடவதான் டிஸ்கி’னே போடுறது????

பங்கேற்றவர்கள்:-

மற்ற விலங்குகளாக- உடன்பிறப்புக்கள்.

பாம்பாக- முன்னாள் மத்திய அமைச்சர்.

வேட்டையனாக- இந்நாள் முதலமைச்சர்.

பனிக் கரடியாக- பிரிட்டீஸ் பீப்பிள்(ஹி ஹி ஹி)

கரடியாக- காங்கிரசார் (மிதவாதிகள்)

சிங்கமாக- காங்கிரசார் (தீவிரவாதிகள்)

இவற்றுக்கெல்லாம் மேலாக,

வனமாக- முனைவர்.மு.க!!!!!

***************************************************************************

கடேசியா ஒண்ணு- இனிமேல் நேரடித் துகிலுரிப்புகள் தொடரும்....

ஹி ஹி ஹி....

Monday, September 19, 2011

ஐயோ குத்துதே! ஐய்யையோ குடையுதே!- பாகம் 2

முந்தைய பாகத்தைப் படிக்க இங்கே செல்லவும்....

முந்தைய காலங்களின் சமீபத்திய பொழுதுகளில் மலைவனத்தின் வனப்பும், வளங்களும் சொல்லிமாளாது...

மற்ற வன உயிர்களின் வளங்களை எடுத்தாட்கொண்டு தன் பரிவாரங்களை வளர்த்தெடுத்த இம்மலைவனத்தின் எச்சில் உணவுகளுக்காய், அதையும் பிரசாதமாய் எடுத்துண்ட வன உயிர்கள் எத்தனை எத்தனை?

தாம் உண்பது எச்சில் உணவு என்பதையும் மறந்த அவ்விலங்குகள், மலை வனத்தின் பெருமைகளை நிதமும் துதிபாடுவதைத் தமது கொள்கையாகவே கொண்டிருந்தன....

மலைவனமும், அத்துதிப்பாடல்களைக் கேளாமல் உறங்கியதில்லை...

அவ்வனமும் அவ்வுயிரனங்களைக் கட்டி ராஜ்யத்தில் கோலோச்சியதுதான்.......

வனத்தின் சுற்றங்களின் எண்ணிக்கை, மிக மிகப் பெரிது.....

வனத்தின் வாரிசுகளும் ராஜ்ஜியம் செய்யவே தயார் செய்யப்பட்டிருந்தனர்..

அவ்வாறான வனமும், அதன் சுற்றமும் நட்பும் வேட்டையனின் தாக்குதலுக்குட்பட்டதால், வெந்து நொந்துதான் போயிருக்க வேண்டும்....

நிதமும் ஒரு அறிக்கை என தொடர்ந்துகொண்டே இருக்கிறது.....

இந்நிலைக்குக் காரணத்தை நாம் அறியும் முன், கரடிகளுக்கும் இந்த வனத்திற்குமான தொடர்புகளை அறிந்துகொள்ள அடுத்த பாகம்வரை பொறுத்திருங்கள்.....

Tuesday, September 6, 2011

ஐயோ குத்துதே! ஐய்யையோ குடையுதே!- பாகம் 1

<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4

குதிரை ஏறவிடாமல் குப்புறத் தள்ளிவிட்ட விலங்குகளையும், தன் வாரிசையும் நிதமும் நினைந்துருகும் மலைவனம்!

வனத்தில் படர்ந்திருக்கும் மரங்கள், மரத்தின் கிளைகள்!

கிலி தட்டிப் பயந்துருகும் சில்வண்டுகள், பெருவன நரிகள்!

வேட்டைக்காரனின் பொறியில் அகப்பட்ட கீரிகள்!

பொறி தட்டிப் பதுங்கிவிட்ட பாம்புகள்...

இரையைக் களவாண்ட ஓநாய்கள்!

ஆம், இதுதான் அந்த வனம்.....

மீன்களைக் கொல்லும் கரடிகளுக்கு இந்த வனத்தின் மேலொரு வாஞ்சை!

கரடிகளின் இனம் பெருகிவிட்டதால், கரடிகளின் கால் மீதியில் வாழும் நிலை, இந்த வளம்பெற்ற வனத்திற்கு!

குப்புற விழுந்த வனம் சுதாரிப்பதற்குள், வேட்டையனின் தாக்குதல்!

சாதாரணத் தாக்குதலல்ல!

வன் தாக்குதல்!

தோட்டாக்கள் கொண்டு வன விலங்குகள் தாக்குதல்....

வனத்தின் உயிர்களெல்லாம், ஒவ்வொன்றாய் வேட்டையனின் கூண்டில்....

இவ்வாறே நீடித்தால், இன்னும் சில காலத்தில் வனமே அழிந்துவிடும்..

ஆக்கிரமித்து விடுவான் வேட்டையன்...

உயிர்களெல்லாம் வனத்திடமே முறையிட்டன....

ஒன்றிரண்டு தோட்டாக்கள் குறிதவறி வனத்தையே துளைத்திருந்தாலும், வனமும் வேட்டையனைப் பற்றி, வெவ்வேறு விதம் கூறிப் பயம் தணித்தது!

வேட்டையனின் வேட்கை அப்போதும் தணியவில்லை!

ஐந்தாண்டுகளுக்குப் போதுமான தோட்டாக்கள் கையிலுண்டு அவனிடம்....

வேட்டைகள் தொடர்கின்றன இன்றளவும்.....

வனத்தின் வளம் போற்றும், வானரங்கள் ஒன்றிணைந்து கரடிகளிடம் மனுக் கொடுக்கப் போயிருக்கிறது, இனிமேலும் தாக்குதல் தொடர்ந்தால் அழுதுவிடுவோமென்று!

திரும்பி வந்தவுடன், கேட்டு எழுதுகிறேன்!


டிஸ்கி- இந்த லிங்கில் உள்ள சேதிக்கும், இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அடிக்கிற வரைக்கும் மிச்சம்....

அடிச்சுப்புட்டு புடுச்சுப் போட்டா

அரசு ஒரு எச்சம்......

- மலைவனம் .