இணைப்பில்

Thursday, May 3, 2012

இன்னா? எதையாவது கால்ல மிதிச்சிட்டியா?

ஒன்பதாயிரத்து சொச்சம் பேஜ் வியூக்கள்... தொண்ணூத்தி சொச்சம் பாலோயர்கள்...

அட..அட.. அட..

அண்ணா நகரில் , எனக்கும் அரை கிரவுண்டு நிலம் கிடைத்த சந்தோஷம்.


அண்ணேன், ஏன் இவன் இப்புடி ரத்தம் வர்றவரைக்கும் சொறியரான்னு பக்குதியலா?

நீ என்னிக்கும் பாக்க மாட்டேண்ணே... எனக்குத் தெரியும், நீ என்னிக்கும் பாக்க மாட்டே...

உனக்கெல்லாம், குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தா மட்டுமே ஓட்டுப் போடும் என் இனம்ண்ணே!!!

உனக்கு என்னிக்காவது அறிவு இருந்து எதுக்கு பிரியாணி போடுறாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு இருந்தா, நான் எழுதறதையும் யோசிப்ப... அதான் இல்லியேன்னு சொல்லுறியா?

சரி விடுண்ணே...

இப்போ நேரா மேட்டருக்கு வாரேன்....

ஜனாதிபதி தேர்தலுக்கு ஆளத் தேடுறாங்கன்னு கேள்விப்பட்டேன்.....

யாராச்சும் பெரிய அரசியல்வியாதிங்களா இருந்தா அன்னை அவர்களிடம் சொல்லுங்க.....
நாம்பளு ஒருத்தரு இருக்காரு...

தமிழன்....

காந்தி வம்சத்தின் பேரைக் கேட்டாலே, நிலத்தில் படுத்து மரியாதை செய்பவன்...

ஆமாம்யா... அந்த ஆளும் காங்கிரஸ்காரன்தான்...

பேரா?

விடுங்க சார் வேணாம்......

சொல்லியே தீரணுமா?

தானைத் தலைவன், சிங்கை ஆதீனம் திரு.பட்டாப்பட்டி அவர்கள்தான்...


டிஸ்கி- அண்ணன் சார்.. எண்ணிய பாலோ பண்ணுற தொண்ணூத்தி ஏழு பேருக்கும் நான் என்ன செஞ்சிருக்கேன்னு யோசிச்சேன்... ஆனா, நெசமா ஒண்ணுமே செய்யலீங்கரபோது, பொல பொலன்னு வருது சார்!  
ஆதலால்,
 
அடுத்த லோக்சபா எலக்சன்ல பி.எம். போஸ்ட்டுக்கு நிக்கலாம்னு இருக்கேன்...
உங்களுக்காக, மந்திரி பதவி வேணா வாங்கித் தாரேன்.

வாழ்க ஜனநாயகம்.

-வெளங்காதவன்.