இணைப்பில்

Tuesday, March 13, 2012

உடன்பிறப்பே...


உடன்பிறப்பே,
                        சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் என்னை, இங்ஙனம் ஓர் மடல் வரையக் காலம் கனிந்திருக்கிறது. நானும் நீயும் காத்திருந்த நேரம் இதுதான். சங்கரன் கோவிலிலே இடைத் தேர்தல் வந்துவிட்டது. இருட்டில் விடப்பட்ட ஆட்சியில், நமக்கொரு சவால். சவாலைச் சாதனையாக்குவதில், இந்தத் தலைவனுக்குத் தேவையான தொண்டன் நீ!
 
                       இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு, வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறான் உன் தலைவன். எழுச்சிமிகு வீரனாய், வீறு கொண்டெழுந்து வா! கேட்கிறது உன் மனசாட்சியின் குரல். அதற்கெல்லாம் பதிலளிக்கும் நேரம் இதோ, வந்துவிட்டது. எனினும், பதிலளிக்க இயலாத அளவு பணிச்சுமையுடன் நான் குடும்பத்துக்காய் கட்சிக்காய் அயராது உழைத்து வருகிறேன் என்பதை நீயறிவாய்.

                        காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே. அப்போது நான் எழுதாத கடிதமில்லை, அனுப்பத தந்தியில்லை என்பதை கழக உடன்பிறப்பே நீயறிவாய். ஆம், இனப் படுகொலைக்கு எதிராய், முதன்முதலில் திருவாய் மலர்ந்தவன் நான்தான். மத்திய சர்க்காருக்கு நான் கொடுத்த நெருக்கடி தாங்காமல்தான், போர் நிறுத்தம் அறிவித்தார்கள் என்பதை இந்த உலகமே அறியும்.

                        இதோ, இப்போது ஐக்கிய நாடுகள் சபையினிலே லங்கைப்போருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்தது அமெரிக்கா. மாற்றினத்தவன் கொடுக்கும் ஆதரவைக் கூட, நீயும் நானும் கொடுத்த/கொடுக்கும் ஆதரவைக் கூட, மத்திய அரசு தராதது கண்டு, வெகுண்டேழுகிறேன் உடன்பிறப்பே!

                        போர் மேகங்கள் திரண்டிருந்த வேளையிலே, நான் உன் பணியாற்ற எமது சட்டசபையிலே தீர்மானம் போட்டுக்கொண்டிருந்தேன் என்பதை நான் சொல்லாமலே நீ அறிவாயடா எனதருமை உடன்பிறப்பே. வரலாற்றைத் திரித்துக் கூறும் கருங்காலிகளுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்"

- மனசாட்சியைக் கழற்றிவைத்துவிட்டு,

மு..






டிஸ்கி:-வேதனைகளை சீரியசான வார்த்தைகளாக்கும் கலை இன்னும் கைவரப் பெறவில்லை. மன்னியுங்கள்!

Friday, March 9, 2012

பதிவு எழுதுதல் (ஆதர்- பதிவுலக மேதை பனங்காட்டு நரி)


சார் என்னமோ தெர்ல சார்!!!
இப்பெல்லாம் பதிவு எழுதுவது, பட்டாவின் ககூஸ்ல ஒக்காந்து வாந்தி எடுக்குறமாறி இருக்கு...
கெடக்கட்டும் கழுதைன்னு, நூசு பாத்தா பிக்காலிங்க அதுக்கு பட்டாவின் கக்கூசே தேவலாம்.


இந்த நெலமைல பெட்ரோலு வேலைய இன்னும் அஞ்சு ரூவா ஏத்துவோம்னு சொல்லி பெட்ரோலிய நிறுவனங்கள் பயமுறுத்துது. ஊழல், வெலைவாசி ஏற்றம், என்கவுண்டர் இதெல்லாம் மக்களை மாக்களாக்கிக் கொண்டிருக்கிறது.


ஆங்.. அதேதான்...

அதுக்கு என்னடா பண்ணுறதுன்னு கேக்குறவங்க இந்தப் பதிவைப் படிங்க..

மத்தவிங்க,

ஊறுகாயுடன் காத்திருக்கும் என்னைப் பார்க்க, பாட்டிலுடன் வூட்டாண்ட வரவும்...

ஆங்...

படிக்குற மவராசங்களா!!!

மொத என்ன பண்ணுரீங்கன்னா, மொத உம்ம சொத்து அல்லது கடன் எம்புட்டுன்னு ஒரு பேப்பரில் எழுதவும்.

என்ன சார்... உம்ம பேப்பர்ல கடன்னு எழுதி இருக்கியா?

அப்ப, நீ என்ன பண்ணுற சாயுங்காலம் சைட் டிஷோட வூட்டாண்ட வந்துரு. அங்க பேசிக்கலாம்.

ம்ம்.. சொத்து பத்து இருக்குறவங்க எல்லாம் லைன் கட்டி நின்னாச்சா?

ரைட்டு..

இப்போ என்ன பண்ணுரீங்கன்னா, நேராப் போயி உங்க சொத்தையெல்லாம் வித்துப்புட்டு, 
---
---
---
---
---
--
--
--
--
--
-
-
-
-
வெளிநாடு எங்கனா போயி செட்டில் ஆயிடுங்க. இன்னும் அஞ்சு வருஷம் இந்தியாவுல இருந்தா, கோவணம் கட்டினவன் கோமாளி ஆயிடுவான்..


புரிதலுக்கு நன்றி!!!

வணக்கம்.


-பனங்காட்டு நரி.


டிஸ்கி:- என்னுடைய பிளாக் ஐ.டி. மறந்துவிட்டதால், இந்த பிளாக்கில் இருந்து போஸ்டு போடுகிறேன்.

டிஸ்கி:- என்னுடைய ரைட்டிங்கில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை என சந்தேகிப்பவர்களுக்கு "நான் விஜிடேரியன் ஆயிட்டேன்".

Tuesday, March 6, 2012

இதையே 'தலைப்பு'ன்னு வச்சுக்க!


ஹல்லோ மக்காள்ஸ்...
அவ் ஆர் யூ?
என்னடா இவன் இங்கிலீசுல பேசுறான்னு பாக்குறீயளா?
அது இனிமே அப்புடித்தேன்...
ஆங்.. அப்புறம்??
மத்திய அரசாங்கம் நாலாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டை  அவிங்க ஆட்சியிலையே ஏலம் விடுவாங்கன்னு நூசு சொன்னான் சின்ராசு...

தக்காளிங்க..

இன்னும் மூணாவது தலைமுறை அலைக்கற்றைக்கான கட்டுமானம் முழுமை அடையல... ரெண்டாம் தலைமுறை அலைக்கற்றை பண்ணின அட்டகாசம் இன்னும் அடங்கல...

வந்துட்டாங்க, நாலாம் தலைமுறை பத்திப் பேச!!!

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க சார், "புள்ளப் பெத்துக்கல, பேரு வைக்கப் போறானாம்"னு..

ம்ம்ம்.. அப்புறம் அஞ்சு மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன... ரெண்டில் , நம் ஆளும் மத்திய அரசான, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என்பது என் எண்ணம்(இன்னும் கவுண்டிங் போயிட்டு இருக்கு)...

ஆக, இந்த எலக்சன் முடிஞ்சதுக்குப் பொறவு பெட்ரோலு வெலை ஏறும்னு பட்சி சொல்லுது..


அப்புடியே, இந்த எலைட் பார் அமைப்பது பற்றி அரசாங்கம் இன்னும் முழுமையான முடிவு எடுக்காதது, குடி மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே!!!


அப்புறம், காமன் வெல்த் ஊழல்-நு ஒன்னு நடந்துது இல்ல?? அதன் முக்கிய ஆவணங்கள் கெடைக்காம திண்டாடுராங்கலாம்... வாழ்க ஜனநாயகம்...
____________________________________________________________________________________
மின்தடை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில்(சென்னையை விடுத்து மற்ற எல்லா இடங்களிலுமே) பல்வேறு தரப்பட்ட தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. அதில், முதுகெலும்பான விவசாயம், மிக அகோரமான முறையில் நலிவடைகிறது. நீர் வளம் பெருக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத தமிழக அரசு மின்வளத்தையும் சுரண்டுவது, எம்போன்ற விவசாயிகளை மீளப் பெருந்துயரில் ஆழ்த்துவதுடன், இந்தத் தலைமுறையினருக்கு உணவளிக்க இயலாத பெரும் சாபத்திற்கும் ஆளாகும்.

________________________________________________________________________________________________
ரொம்ப முக்கியமான விஷயம்...


தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள்.

________________________________________________________________________________________________
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..

2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்

 

(கொஞ்சம் பிசியா இருந்தேன்.. இனி அடிக்கடி சந்திக்கலாம்)
-வெளங்காதவன்.