இணைப்பில்

Sunday, June 30, 2013

மொட்டக்கடுதாசிமோகி,
நாந்தேன்! 

நேத்துப் பாத்தேன், நம்ம ஊரு வாயக்காலிலே துணி தொவைக்கும்போது. ஒரு வாரமா மாமன் ஊருக்குப் போயிருந்தியா? கொஞ்சம் எளச்சு வந்திருக்க. ஏன் அங்க சோறுகீறு எதுவும் போடலியா? உன் அப்பத்தா நேத்து உன் மாமனார், அதேன் நம்ம வீட்டுக்கு வந்திருந்துச்சு. உங்க வீட்ல கோழிக் கறியாம். டீக்கடை ராமசாமி வூட்டு நாயி கடிச்சதுல இருந்து, கோழி திங்கிறது இல்லியாம். ஒண்ணா ஒக்காந்து கொழுக்கட்டை சாப்புட்டம்.

நாஞ்சொன்னேன் பாத்தியா? தங்கவேலு அவனோட வீட்ட நமக்கு விக்கமாட்டானாம். என்னமோ போ. இப்போ ஏதோ புதுசா கிரீமு வந்திருக்காம்; இனிமே பேரன் லவ்லி போடாத.ஆவணி மாசம் எல்லாருஞ்சேந்து மாகாளியம்மன் கோயிலு கும்பாவுஷேகம் வச்சிருக்காங்களாம். நேத்து மாரீப்பன் சொன்னான்.

ஊருல இருந்து ஏதாச்சும் வாங்கியாந்தியா? நீ சொன்னமாரியே பீடி குடிக்கறத உட்டுட்டேன். நம்ம செவலை மாட்டுக்கு பால் வத்திப்போயிருச்சு. இனிமே, மொண்டி அப்பிச்சி மாட்டுப்பால் தான் வாங்கோணும். தெண்டபாணி மாமன் சீட்டு ஆரம்பிச்சு இருக்காம். அம்மா சொல்லுச்சு. எங்கபோயி மாசம் ரெண்டாயிரம் குடுக்கறது?

செரி வுடு. எல்லாஞ்சரியாடும். 

உங்க அப்பங்கிட்ட எப்ப வந்து பொண்ணுக் கேக்கட்டும்? பல்லடத்துல இருந்து ஜாதகம் கேட்டு வந்தாங்களாம். மூணு ஏக்கரா காடு வச்சிருக்குற எனக்கு உங்க அப்பன் பொண்ணுக் குடுப்பானான்னு தெரியல. அதுனால, வெகுசீக்கிரமா சொல்லி அனுப்பு.

கலியாணச் செலவுக்கு காளைய விக்கோணும். அக்காளுக்கு சீலை துணிமணி எடுக்கோணும். ஒரு பவுனு இருவதாயிரம். ஆறு பவுனும் எடுக்கோணும். காட்டுப் பத்திரத்த வச்சனாலும் நான் ஏற்பாடு பண்ணுறேன்.

உனக்கு எத்தினி சீலை எடுக்குறது? நானு ஒரு சீலை எடுத்தேன். அம்மா அதப் பாத்திடுச்சு. “உனக்குத்தான்மா” ன்னு குடுத்துட்டேன். இதெல்லாம் பத்தாதுன்னு ராமண்ணங்கிட்ட சொல்லி ரெண்டு சீலை எடுத்திருச்சு. வாரம் எறநூறு ரூவா மூணு மாசம் கொடுக்கோணும்.

நாளைக்கு உன்னை மாரியாத்தா கோயில்ல பாக்குறேன்.

இதையப் படிச்சுட்டு, எப்பப் பொண்ணுப்பாக்க வரட்டும்னு பதில் கடுதாசி கொடுக்கவும். நாளைக்கு உங்க அப்பத்தா கூட வந்தாப் பேச முடியாது.

எதுக்கும், இந்தக் கடுதாசியக் கொண்டுவரும் பொடுசுகிட்ட, ஆயிரம் ரூவா குடுத்துவிடவும். காளைகளுக்கு தவுடு வாங்கோணும்.

-வெளங்காதவன்

Saturday, June 1, 2013

இலக்கிய மொண்ணைகள்-கடிதங்கள்திரு. இலக்கியச்செம்மல் வெளங்காதவன் அவர்களுக்கு,   இலக்கியச் சார்பும், மென்னியல் நுட்பமும், புனைவியல் திறனும் ஒருசேர்ந்த எழுத்தாளர்களுக்கு, (கவனிக்க) தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதை சமகால எழுத்தாளர்கள் குறையியைபுகின்றாரே? இது சமூக வக்கிரத்தின் வெளிப்பாடா? இன்னும் இது தொடருமா?அன்புடன்,

கெண்டைக்கால் கெணேசன்,

கெணத்துக்கடவு.


அண்ணேன்,
உன்னோட கேள்வியப்பாத்து தெகச்சு நிக்கிறேண்ணேன். கெணத்துக்கடவுலிருந்து இம்மாம் பெரிய சமாச்சாரத்த, மூணே வரில கேட்டிருக்கியே!! இருண்ணேன் சொல்லுறேன்.

அதாகப்பட்டது, கெணேசன்ன்ற உன்னோட பேரைப் பாக்குறபோது, நீனு எவனுக்கும் மொய்கூட வச்சிருக்க மாட்டீனு தெரியுதுண்ணேன். அதேன் காரமடை சோசியறு கருணைன்றது.

ஆங், மேட்டருக்கு வாறேன்.
அதாவது, மொண்ணைங்கள பலவகையாப் பிரிக்கலாம், காற்றுப் பிரிவதுபோல். அதாவதுண்ணே, சத்தமா நாத்தமில்லாம, இல்ல சத்தமில்லாம நாறிப்போயி.
ஆனா, நாம பேசப்போற மொண்ணைங்க சத்தமாவும், நாத்தமாவும் காற்றைப்பிரிப்பவர்கள்.
இப்போ புரிஞ்சுதோ?
தெரியும்ண்ணேன், உனக்குப் புரியாம இருந்தாத்தேன் அதிசயம்.
சரி கண்ணத்தொடச்சிட்டு அடுத்த பாராவுக்குப் போ.
“எழுதறவன் எழுத்தாளன். அவனுக்குப் பணம் வருது. சிலே போறான், பொண்ணுங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுக்கறான், பிச்சை எடுக்கறான், டைரக்டர்ட்ட பல்ல இளிக்கறான், பெரியவர திட்டுறான் அப்புடி இப்புடின்னு திடும்னு கெளப்பிவுட்டாங்க; சொல்லப்போனா அவுனங்களே கெளப்பி வுட்டானுக.

எந்தக் கருமம் எப்புடிப் போனா, உனக்கென்ன? இல்ல எனக்கென்ன? இல்ல இந்த ஊருக்குத்தான் என்ன?”

ஆதலால், மூடிட்டுப் போயி வெவசாயம் பண்ணுற வழியப் பாக்கவும்.

வெ


டிஸ்கி:- இந்த மரணத்தைப் போல், வேறெந்த மரணமும் என்னைப் பாதித்ததில்லை. மிஸ் யூ சாரே!

டிஸ்கி1:- மேலே கண்ட டிஸ்கியைப் பற்றி விவாதிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.