இணைப்பில்

Saturday, January 28, 2012

கருப்புப் பணமும், கருங்காலிகளும்...

சார்.. வணக்கம் சார்!!!!
நீ நல்லா இருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும் சார்....
பின்ன, இந்த வருஷத்தோட ஒலகம் அழியப்போவுதுன்னு எவனாவது சொன்னாலும், 2016  எங்க ஆட்சிதான்-னு சொல்லிப் பெருமைப்படுற நீ, என்னைக்குமே நல்லா இருப்ப சார்....
ஆங்.....
மேட்டருக்கு வருவோம்..
இந்தக் கறுப்புப் பணம்கருப்புப் பணம்னு சொல்றாங்களே, அது கருப்பா இருக்குமான்னு கேக்குற ரகம் சார் நானு... ஆனா, கீழே இருக்குற டீடைலப்பார்த்தா, அது கருப்பா இருந்தாலும் வெளுப்பா இருந்தாலும் பணம் பணம்தான் சார்....

சார்... மேலே இருக்குற படத்தப் பாத்துட்டு, அதுல இருக்குற ஆளுங்கள மேலே உனக்கு சராமாரியா கோவம் வருதா சார்?
நீதான் சார் நம்ம ஆளு... (கோவம் வராதவங்க எல்லாம் வூட்டாண்ட வாங்க சார்.... இந்தக் கருமத்தையெல்லாம் படிக்க வேணாம்...) நீ வா சார்.. நாம அடுத்த பாராவுக்குப் போவம்...
"சார்.. வூட்ல எல்லாம் சவுக்கியமா?"
"....."
"சார்.. கொயந்தைங்க என்ன பண்ணுது சார்?"
"....."
"சார்.. நான் பாட்டுக்குக் கேட்டுக்கினு இக்கீறேன்.. நீ மடமடன்னு எங்க சார் போற?"
"......"
"சார்... நில்லு சார்....இந்தக் கருப்புப் பணம் வச்சு இருக்குறவங்க மேல ஏன் கோவம் சார்?"
"......"
"சார் சொல்லு சார்... தேசத்தின் பணத்தைக் கொள்ளை அடிச்சாங்கன்னு கோவப்படுறீயலா?"
"அடப்போய்யா.... நானும் எப்புடி எப்புடியெல்லாமோ சம்பாதிச்சுப் பாக்குறேன்.. ஆனாகோவணத்துல ஒரு கட்டிங் காசுக்கு மேல நிக்க மாட்டீங்குது.. ஆனா, இவிங்க மட்டும் எம்புட்டு சூதானமா இம்புட்டுப் பணத்த சேத்தாங்கன்னு கோவம்யா... நீ வேற எங்கிட்ட வந்து வாயக் கெளரிட்டு..."
"??????"
******************************************************************************
சார்... நான் கருங்காலின்னு சொன்னதுஅந்த லிஸ்டுல இருக்குற ஆளுங்களைன்னு நெனச்சா.... நீ சரியான முட்டாக் கொரங்கு சார்.......
அந்தப் புண்ணியவான்களுக்கும்தமிழ்க் காவலர்களுக்கும்அப்புறம் மத்த எல்லாருக்கும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தேடுத்தியே... இனிமே தேர்ந்தெடுக்கவும் போறியே... நீதான் சார் அந்தக் கருங்காலி...
ஆங்... இன்னுமொண்ணு.... 
எலைட் பார்ல சரக்கு வெலை அதிகம்னு போராட்டம் பண்ணக் கூப்பிடுவாக!!! குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசப்பட்டுப் போயிடாத சார்!!! 'எடா'ன்னு ஒரு சட்டம் தயாராகிட்டு இருக்கு சார்!!!!


முடிஞ்சு போன புத்தாண்டுபொங்கல் மற்றும் குடியரசு நாள் வாழ்த்துக்களுடன்,
-வெளங்காதவன்.