பன்னாடை நடுத்தர மக்களே,
நீங்கெல்லாம் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?
ங்கொய்யாலே! ஒரு ரூவா அரிசி வெலைய ஏத்துனதுக்கு
என்னா சவுண்டு?
2G ல கொள்ளையடிச்சோம்!
மூடிட்டு இருந்தீங்க!
வெளிநாட்டுல இருக்குற கருப்புப் பணத்தக் கணக்கு
காட்டமாட்டம்னு சொன்னோம்!
மூடிட்டு இருந்தீங்க!
லோக்பால் அம்புட்டுதேன்னு சொன்னோம்!
மூடிட்டு இருந்தீங்க!
பாலுவோட சேந்து கப்பல் விட்டுக்
கொள்ளையடிச்சோம்!
மூடிட்டு இருந்தீங்க!
மகனோட சேந்து கோதுமை வெலையை ஏத்துனோம்!
மூடிட்டு இருந்தீங்க!
ரூவாவோட மதிப்ப ஒலக சந்தைல எறக்குனோம்!
மூடிட்டு இருந்தீங்க!
பெட்ரோல் வெலை மதிப்பீட்ட தனியார் கைல
கொடுத்தோம்!
மூடிட்டு இருந்தீங்க!
வாழும் வள்ளுவரோட சேந்து, தமிழர்கள அழிச்சோம்!
மூடிட்டு இருந்தீங்க!
நாடாளுமன்றக் கட்டிடத்துல தீ வச்சு, ஆவணங்கள
அழிச்சோம்!
மூடிட்டு இருந்தீங்க!
காமன்வெல்த் ஊழல் பண்ணுனோம்!
மூடிட்டு இருந்தீங்க!
இனியும் 2G ல அடிக்கப்போறோம்!
மூடிட்டுத்தான் இருப்பீங்க!
வாயை.....
இந்த ஒரு ரூவாய ஏத்துனதுக்கு எத்தன பேச்சு?
இப்பவெல்லாம் சரக்கு வெலையவே கன்னாபின்னான்னு ஏத்துறாங்க.
அதையெல்லாம் கேக்க வக்கில்லை.
சொம்பத்தூக்கிட்டு வந்துட்டானுவ கேனைங்க!
ஆதலால்,
வாழைப்பழம் சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்ட, அன்னை
சோனியாஜியின் அடி வணங்கி முடிக்கிறேன்!
நன்றி!
இங்ஙனம்,
ப.சிதம்பரம்.




