இணைப்பில்

Sunday, June 30, 2013

மொட்டக்கடுதாசிமோகி,
நாந்தேன்! 

நேத்துப் பாத்தேன், நம்ம ஊரு வாயக்காலிலே துணி தொவைக்கும்போது. ஒரு வாரமா மாமன் ஊருக்குப் போயிருந்தியா? கொஞ்சம் எளச்சு வந்திருக்க. ஏன் அங்க சோறுகீறு எதுவும் போடலியா? உன் அப்பத்தா நேத்து உன் மாமனார், அதேன் நம்ம வீட்டுக்கு வந்திருந்துச்சு. உங்க வீட்ல கோழிக் கறியாம். டீக்கடை ராமசாமி வூட்டு நாயி கடிச்சதுல இருந்து, கோழி திங்கிறது இல்லியாம். ஒண்ணா ஒக்காந்து கொழுக்கட்டை சாப்புட்டம்.

நாஞ்சொன்னேன் பாத்தியா? தங்கவேலு அவனோட வீட்ட நமக்கு விக்கமாட்டானாம். என்னமோ போ. இப்போ ஏதோ புதுசா கிரீமு வந்திருக்காம்; இனிமே பேரன் லவ்லி போடாத.ஆவணி மாசம் எல்லாருஞ்சேந்து மாகாளியம்மன் கோயிலு கும்பாவுஷேகம் வச்சிருக்காங்களாம். நேத்து மாரீப்பன் சொன்னான்.

ஊருல இருந்து ஏதாச்சும் வாங்கியாந்தியா? நீ சொன்னமாரியே பீடி குடிக்கறத உட்டுட்டேன். நம்ம செவலை மாட்டுக்கு பால் வத்திப்போயிருச்சு. இனிமே, மொண்டி அப்பிச்சி மாட்டுப்பால் தான் வாங்கோணும். தெண்டபாணி மாமன் சீட்டு ஆரம்பிச்சு இருக்காம். அம்மா சொல்லுச்சு. எங்கபோயி மாசம் ரெண்டாயிரம் குடுக்கறது?

செரி வுடு. எல்லாஞ்சரியாடும். 

உங்க அப்பங்கிட்ட எப்ப வந்து பொண்ணுக் கேக்கட்டும்? பல்லடத்துல இருந்து ஜாதகம் கேட்டு வந்தாங்களாம். மூணு ஏக்கரா காடு வச்சிருக்குற எனக்கு உங்க அப்பன் பொண்ணுக் குடுப்பானான்னு தெரியல. அதுனால, வெகுசீக்கிரமா சொல்லி அனுப்பு.

கலியாணச் செலவுக்கு காளைய விக்கோணும். அக்காளுக்கு சீலை துணிமணி எடுக்கோணும். ஒரு பவுனு இருவதாயிரம். ஆறு பவுனும் எடுக்கோணும். காட்டுப் பத்திரத்த வச்சனாலும் நான் ஏற்பாடு பண்ணுறேன்.

உனக்கு எத்தினி சீலை எடுக்குறது? நானு ஒரு சீலை எடுத்தேன். அம்மா அதப் பாத்திடுச்சு. “உனக்குத்தான்மா” ன்னு குடுத்துட்டேன். இதெல்லாம் பத்தாதுன்னு ராமண்ணங்கிட்ட சொல்லி ரெண்டு சீலை எடுத்திருச்சு. வாரம் எறநூறு ரூவா மூணு மாசம் கொடுக்கோணும்.

நாளைக்கு உன்னை மாரியாத்தா கோயில்ல பாக்குறேன்.

இதையப் படிச்சுட்டு, எப்பப் பொண்ணுப்பாக்க வரட்டும்னு பதில் கடுதாசி கொடுக்கவும். நாளைக்கு உங்க அப்பத்தா கூட வந்தாப் பேச முடியாது.

எதுக்கும், இந்தக் கடுதாசியக் கொண்டுவரும் பொடுசுகிட்ட, ஆயிரம் ரூவா குடுத்துவிடவும். காளைகளுக்கு தவுடு வாங்கோணும்.

-வெளங்காதவன்

21 comments:

”தளிர் சுரேஷ்” said...

வித்தியாசமாய் ஒரு கடிதம்! சூப்பர்!

M(uthu)குமரன் said...

Nalla iruku namma ooru slang :) wishes :)

வெற்றிவேல் said...

வித்தியாசமா இருக்குது மாப்ள... கொண்டு வந்த பொடுசு, என் தங்கச்சி கிட்ட கொடுக்கறதுக்கு முன்னாடி நான் பார்த்துட்டேன், முதல்ல மூணு ஏக்கர் நிலத்த ஆறு ஏக்கரா மாத்துங்க, பிற்ப்பாடு நாம கல்யாணத்த பத்தி பேசலாம்.... கேட்டுச்சா... இப்போ தவுட்டுக்கும் கொடுக்க முடியாது, கிவுட்டுக்கும் கொடுக்க முடியாது...!

MANO நாஞ்சில் மனோ said...

ஆரம்ப காலத்துல மும்பையில் இருந்து நான் ஊருக்கு கடிதாசி எழுதிய நியாபகம் வந்துருச்சுய்யா....!

Unknown said...

வாய்ப்பாடி ஆவி உமக்குள்ள பூந்திருச்சோ....பங்கு!

வெளங்காதவன்™ said...

//s suresh said...

வித்தியாசமாய் ஒரு கடிதம்! சூப்பர்!
///

அண்ணேன். உன்னோட கருத்தப்பாத்து கதறிக் கதறி அழுவுதேன்.

நன்னிண்ணேன்!

//M(uthu)குமரன் said...

Nalla iruku namma ooru slang :) wishes :)///

Actually this is written in Japnese. Aren't u from Japan? Lol :)

///இரவின் புன்னகை said...

வித்தியாசமா இருக்குது மாப்ள... கொண்டு வந்த பொடுசு, என் தங்கச்சி கிட்ட கொடுக்கறதுக்கு முன்னாடி நான் பார்த்துட்டேன், முதல்ல மூணு ஏக்கர் நிலத்த ஆறு ஏக்கரா மாத்துங்க, பிற்ப்பாடு நாம கல்யாணத்த பத்தி பேசலாம்.... கேட்டுச்சா... இப்போ தவுட்டுக்கும் கொடுக்க முடியாது, கிவுட்டுக்கும் கொடுக்க முடியாது...!///

இப்புடிச் சொல்லலவோய். பொண்ணு ரெண்டாயிரம் ஓவா கொடுத்து அனுப்பியிருக்கு.

// MANO நாஞ்சில் மனோ said...

ஆரம்ப காலத்துல மும்பையில் இருந்து நான் ஊருக்கு கடிதாசி எழுதிய நியாபகம் வந்துருச்சுய்யா....!////

அந்த ஜானிவாக்கர எனக்குக் கொடுத்திருந்தா..... அவ்வவ்....

//வீடு சுரேஸ்குமார் said...

வாய்ப்பாடி ஆவி உமக்குள்ள பூந்திருச்சோ....பங்கு!////

"அதாகப் பட்டது, கள்ளுக்குடிச்சா ஒடம்புக்கு நல்லதா?ன்னா, ஆமா நல்லது;ஆனா, நெறையக் குடிச்சா கல்லீரல் வெடிச்சிரும்."

-என் அடுத்த நாவலின் ஒரு பகுதியிலிருந்து

Madhavan Srinivasagopalan said...

// எதுக்கும், இந்தக் கடுதாசியக் கொண்டுவரும் பொடுசுகிட்ட, ஆயிரம் ரூவா குடுத்துவிடவும். காளைகளுக்கு தவுடு வாங்கோணும். //

That's the point, your honour !

saidaiazeez.blogspot.in said...

என்னண்ணே மொட்டக்கடுதாசின்னு சொல்லிட்டு இப்படி மொத்த பரம்பரையையும் சொல்லிப்புட்டீங்க?
இருந்தாலும் உங்க நேர்மய நான் பாராட்டுறேன்!

நாய் நக்ஸ் said...

சந்தேகமே இல்லை.....அடுத்த சிறந்த கடிதம் எழுதுபவர் நீர்தான்.....

யோவ்வ்வ்வ்வ்....ஒரு பெரியவருக்கு நீர் போட்டியா?????????

அனைவருக்கும் அன்பு  said...

சிரிக்க வைத்த சிறந்த பதிவு ( இப்படி கடுதாசி எழுதினா விளங்கிடும் காதல் )

ஜீவன் சுப்பு said...

// இப்படி கடுதாசி எழுதினா விளங்கிடும் காதல்//

ஹா ஹா ஹா ... ! விளங்காதவன் காதல் விளங்கிடும் ....சூப்பர் ...!

Prem S said...

அட கலக்கலுங்கோ

wicket said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

கடைசி வரி கலக்கல்.
இதமான மழைச்சாரல் போல் மாறுதலுக்கு ஒரு கடிதம்.
வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

மொட்டக்கடிதாசுனு பேர் வச்சிருக்கீங்களே ஏன்?

தனிமரம் said...

காதலியிடமே கடன் கேட்கும் உங்க காதல்கடிதம் பிடிச்சிருக்கு வெளங்காதவன் ஐயா.போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் !

ஸ்ரீராம். said...

மானே உனக்கொரு தூது விட்டேன்...வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு பாடல் நினைவுக்கு வந்தது! இந்தக் காதல் கடிதத்தை மற்றவர்கள் படித்தாலும் பெரிய ஆபத்திருக்காது! படித்தவர்கள் சொல்லவும் மாட்டார்கள்! அப்புறம் ஆயிரம் ரூபாய் அவர்கள் கொடுக்க வேண்டியதாகி விடுமே! :))))

வெளங்காதவன்™ said...

எதுக்கும் பதில் சொல்ல இயலாமல், அடுத்த நாவலுக்கு எழுதிக் கொண்டிருப்பதால், அனைவருக்கும் நன்றிகளை மட்டும் உரித்தாக்குகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

எதுக்கும், இந்தக் கடுதாசியக் கொண்டுவரும் பொடுசுகிட்ட, ஆயிரம் ரூவா குடுத்துவிடவும். காளைகளுக்கு தவுடு வாங்கோணும்.

-------

ஹா... ஹா.... அருமை.
கடிதம் கலக்கல்
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சசிகலா said...

இங்கும் காசு தான் கேட்கனுமா ? காதலை கேளுங்கப்பா ?

Tamizhmuhil Prakasam said...

வித்தியாசமாய் ஓர் காதல் கடிதம். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே....