
முந்தைய பாகம்- இங்கே...
கரடிகள்-
வனமிருக்கும் நாடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், பனிக்கரடி என்னும் வெளிநாட்டு மிருகத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. விலங்குகள் பல ஒன்றிணைந்து சங்கங்கள் அமைத்தன. இதில் பெரியதும், முக்கியமனாதுமாகக் கருதப்படுவது கரடிகளும், சிங்கங்களும் அணிவகுத்த சங்கம் ஆகும். கரடிகள் சாணக்கியத்தனம் நிறைந்த அறிவோடும், சிங்கங்கள் நிரம்பப் பெற்ற வலிமையோடும் பனிக் கரடிகளை எதிர்த்து, போராடத் துணிந்தன.
போராட்டமென்றால் சாதாரணப் போராட்டமல்ல.....
அதைப் பற்றி எழுதினால் நீண்டுகொண்டே(???!!) போகுமாதலால், கரடிகளைப் பற்றிப் பார்ப்போம்....
சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் கரடிகள் அமர்ந்தன (அதிலும் சில குள்ளநரித்தனம் செய்துதான்). எப்படியோ, பனிக்கரடியும் நொந்து நூலாகி, அந்த நாட்டை கரடிகளிடம் விற்று விட்டுச் சென்றது.
அன்று முதல் இன்று வரை, அந்தக் கரடிகளும் நாடாண்டு வருகிறது.
இம்மலைவானத்துக்கும், கரடிகளுக்குமான தொடர்பு சுவாரஸ்யமானது. இவ்வனம், கரடிகளை நிரந்தரமாய் ஆதரித்ததும், எதிர்த்ததுமில்லை. கரடிகளும் இவ்வனத்தையும் ஒரு பொருட்டாக நினைத்தே ஆட்சி செய்தும் வந்தன.
இவ்வாறாக, கரடிகளும் வனமும் முகமுன் நட்புடனும், அகத்துள் விரோதித்தும் அதனதன் பாதையில் ஆண்டன/ ஆள்கின்றன.
இந்தக் குத்தலுக்கும் குடைச்சலுக்குமான காரணத்தையும் ஆராய்ந்தறிவோம்......
நாட்டை ஆளும் கரடிகளின் ஆட்சியில், இவ்வனத்தின் சுற்றத்தாருக்கும் பங்குண்டு. கூட்டு ஆட்சி... சன நாயகம்.
வனத்திற்கு ஏராளமான(???!!!) வாரிசுகளுண்டு.
வாரிசுகளில் ஒருவர்தான் குத்தலுக்கும் குடைச்சலுக்கும் காரணமென்பதை சொல்லவும் வேண்டுமோ?
***************************************************************************************
{சீரியசு-கோகுலத்தின் சூரியனின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தப் பதிவு அவசர அவசரமாக முடிக்கப்படுகிறது. “நேருக்கு நேர நின்று துகிலுரிக்க(பட்டா- ஜிந்தாபாத்) வேண்டு”மென்ற எந்தன் கொள்கையை பிராண்டி விட்டார்.... நன்னி}
சுச்கி- நான் சொல்ல வந்தது வேறேனினும், முழுவதையும் பதிவேற்ற ஒவ்வாமல் இப்போது நடையைக் கட்டுகிறேன். எதிர்காலத்தில் இந்தப் பதிவு தொடர்ந்தாலும் தொடரலாம்!!!!!
வெச்கி- எத்தன தடவதான் டிஸ்கி’னே போடுறது????
பங்கேற்றவர்கள்:-
மற்ற விலங்குகளாக- உடன்பிறப்புக்கள்.
பாம்பாக- முன்னாள் மத்திய அமைச்சர்.
வேட்டையனாக- இந்நாள் முதலமைச்சர்.
பனிக் கரடியாக- பிரிட்டீஸ் பீப்பிள்(ஹி ஹி ஹி)
கரடியாக- காங்கிரசார் (மிதவாதிகள்)
சிங்கமாக- காங்கிரசார் (தீவிரவாதிகள்)
இவற்றுக்கெல்லாம் மேலாக,
வனமாக- முனைவர்.மு.க!!!!!
***************************************************************************
கடேசியா ஒண்ணு- இனிமேல் நேரடித் துகிலுரிப்புகள் தொடரும்....
ஹி ஹி ஹி....