இணைப்பில்

Saturday, June 1, 2013

இலக்கிய மொண்ணைகள்-கடிதங்கள்



திரு. இலக்கியச்செம்மல் வெளங்காதவன் அவர்களுக்கு,



   இலக்கியச் சார்பும், மென்னியல் நுட்பமும், புனைவியல் திறனும் ஒருசேர்ந்த எழுத்தாளர்களுக்கு, (கவனிக்க) தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதை சமகால எழுத்தாளர்கள் குறையியைபுகின்றாரே? இது சமூக வக்கிரத்தின் வெளிப்பாடா? இன்னும் இது தொடருமா?



அன்புடன்,

கெண்டைக்கால் கெணேசன்,

கெணத்துக்கடவு.


அண்ணேன்,
உன்னோட கேள்வியப்பாத்து தெகச்சு நிக்கிறேண்ணேன். கெணத்துக்கடவுலிருந்து இம்மாம் பெரிய சமாச்சாரத்த, மூணே வரில கேட்டிருக்கியே!! இருண்ணேன் சொல்லுறேன்.

அதாகப்பட்டது, கெணேசன்ன்ற உன்னோட பேரைப் பாக்குறபோது, நீனு எவனுக்கும் மொய்கூட வச்சிருக்க மாட்டீனு தெரியுதுண்ணேன். அதேன் காரமடை சோசியறு கருணைன்றது.

ஆங், மேட்டருக்கு வாறேன்.
அதாவது, மொண்ணைங்கள பலவகையாப் பிரிக்கலாம், காற்றுப் பிரிவதுபோல். அதாவதுண்ணே, சத்தமா நாத்தமில்லாம, இல்ல சத்தமில்லாம நாறிப்போயி.
ஆனா, நாம பேசப்போற மொண்ணைங்க சத்தமாவும், நாத்தமாவும் காற்றைப்பிரிப்பவர்கள்.
இப்போ புரிஞ்சுதோ?
தெரியும்ண்ணேன், உனக்குப் புரியாம இருந்தாத்தேன் அதிசயம்.
சரி கண்ணத்தொடச்சிட்டு அடுத்த பாராவுக்குப் போ.
“எழுதறவன் எழுத்தாளன். அவனுக்குப் பணம் வருது. சிலே போறான், பொண்ணுங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுக்கறான், பிச்சை எடுக்கறான், டைரக்டர்ட்ட பல்ல இளிக்கறான், பெரியவர திட்டுறான் அப்புடி இப்புடின்னு திடும்னு கெளப்பிவுட்டாங்க; சொல்லப்போனா அவுனங்களே கெளப்பி வுட்டானுக.

எந்தக் கருமம் எப்புடிப் போனா, உனக்கென்ன? இல்ல எனக்கென்ன? இல்ல இந்த ஊருக்குத்தான் என்ன?”

ஆதலால், மூடிட்டுப் போயி வெவசாயம் பண்ணுற வழியப் பாக்கவும்.

வெ


டிஸ்கி:- இந்த மரணத்தைப் போல், வேறெந்த மரணமும் என்னைப் பாதித்ததில்லை. மிஸ் யூ சாரே!

டிஸ்கி1:- மேலே கண்ட டிஸ்கியைப் பற்றி விவாதிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

8 comments:

Unknown said...

வோய்....கெண்டைக்கால் கெணேசனை செவுனிய பாத்து ஒரே அப்பா அப்புய்யா....ஸ்டாம்ப் ஒட்டாம தபால் போட்டிருக்கான் உமக்கு..! ஒரு எலக்கிய செம்மலுக்கு என்ன மரியாதை இருக்கு இந்த நாட்டுல..!

முத்தரசு said...

திரு. வெ அவர்களுக்கு

உமது பதில் கண்டு வியக்கேன்
உமது எலக்கிய சேவை கண்டு கண்டு கண்டு பொறாமையில் தவிக்கேன்

நன்றி

எலக்கியவியாதி பாசறை
கெணத்துமேடு

வெங்கட் said...

எலக்கியம்னு வந்துட்டாலே இப்படித்தான்யா.... ஒரே குஷ்டமப்பா..!

நாய் நக்ஸ் said...

Aduththu namma pathivu.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே.....இலக்கியக்காற்று நன்றாக பிரிந்திருக்கிறதே......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாய் நக்ஸ் said...
Aduththu namma pathivu.....////

நாசமா போச்சு.... எல்லாரும் எல்லாத்தையும் டெலிட் பண்ணி ஊருப்பக்கமா கெளம்பி போங்கப்பா......

கோவை நேரம் said...

அட..ரொம்ப நாளைக்கு அப்புறம்..
இனி வெளங்கிடும்..

Anonymous said...

கருமம் வடக்க போனா என்ன தெக்க போனா என்ன, நம்ம மேல பாயாம போனா பத்தாதா