இணைப்பில்

Thursday, July 4, 2013

முத்தாய்ப்பு



இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

கட்.

இடம்- நெகமம்.
நாள்- மிகச்சரியாக இருபத்தைந்து வருடத்துக்கு முன்பு.

“பாருடி. நம்ம பையன் மொதோ ரேங்கு வாங்கியிருக்கான்”, சரசுவிடம் காட்டிக் கொண்டிருந்தான் கருப்புசாமி.
“ஆமா, இங்க பாத்திரங்கழுவ நேரமில்ல. படிக்கிறதப் பாக்க நான் வாரேன்”, இருந்த வெறுப்பை வார்த்தைகளில் உமிழ்ந்தாள் சகதர்மினி.
“எங்கப்பந்தான் என்னிய படிக்க வக்கில.இவனாவது படிக்கவச்சு பெரிய ஆளா வரட்டுமே” தாயின் பேச்சைக் கேட்டு தளர்வாயிருந்த மகனை அரவணைக்கும்படி பேசினான் கருப்பு.
அந்தக் குடிசைக்குக் கதவெல்லாம் இல்லை. அடுப்புப் புகை கண்ணை கசக்க வைக்கும். ஆனாலும், கணேசன் பளீரெனச் சிரித்தபடி விளையாடப்போனான்.
“எங்க அப்பனை என்னால வச்சுக் காப்பாத்த முடியலை. இவன் படிச்சாவது நம்மைக் காப்பாத்தட்டுமே” மனைவியின் பதிலை எதிர்பாராமல் கருப்பு பேசியது முனகலாக கணேசன் காதுக்கு எட்டியது.

கட்.

இடம்- கோவை.
நாள்- இரண்டாயிருத்துப் பத்தின் ஆறாவது மாதத்தின் ஒரு வாரநாள்.

“யூ ஆர் செலக்ட்டேட்; கங்க்ராஜுலேசன்” நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந்தான் கணேசன்.

“தேன்க்யூ வெரிமச் சார், தேன்க் எ லாட்” வார்த்தை வராமல் நீர் மல்கப்பேசினான். கையை நீட்டியவர் அவன் கட்டுப்பாட்டிலிருந்து தன் கையைத் தனதாக்கிக் கொண்டார்.

கட்

இடம்- செஞ்சேரிமலை
நாள்- இரண்டாயிரத்துப் பன்னிரண்டு, கூதிர்கால மாதக் கடைசி.

“பெரியவா யாராவது வந்திருந்தா கூப்பிடுங்கோ. தாலி எடுத்துக்கொடுக்கணும்” ஐயர் அடிநாதமாக முழங்கினார்.
“வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்றோம் சாமி; நீங்களே தாலி எடுத்துக் கொடுங்கோ”வென வேண்டினான் கணேசன்.
அனைத்தும் முடிந்து, அவன் இல்லை இல்லை, அவர்கள் படியில் இறங்கிக்கொண்டிருந்தனர்.

கட்

இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

-வெளங்காதவன்

15 comments:

Unknown said...

நல்லாருக்கியா பூச்சாரி..!

Robert said...

அவர்கள் படியில் இறங்கிக்கொண்டிருந்தனர்.// அப்போ எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான்.

Robert said...

பழுத்த மட்டையை பார்த்து குருத்து மட்டை சிரிச்ச கதைதான். இன்று நாம் நமது பெற்றோருக்கு செய்வதுதான் நாளை நமக்கும் என்பதை உணராதவர்கள் இருக்கும் வரை இது நடக்கத்தான் செய்யும். ஆதங்கப்படுவதைத் தவிர வேற என்ன செய்வது???

முத்தரசு said...

ஆமுங்க

முத்தரசு said...

நெஞ்சை பிழிஞ்சிட்டீரே வெளங்காதவா

Unknown said...

ம்ம்ம்

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கதை! நன்றி!

வெளங்காதவன்™ said...

/// வீடு சுரேஸ்குமார் said...

நல்லாருக்கியா பூச்சாரி..!///

எல்லாம் தாங்கள் கொடுத்த யானைப்பால்தான் மன்னா!

//Robert said...

அவர்கள் படியில் இறங்கிக்கொண்டிருந்தனர்.// அப்போ எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான்.///

அதெல்லாம் நீங்களே மீன் பண்ணிக்கங்கவோய்... நான் எதுவுஞ் சொல்லப்போயி... எதுக்கு பொல்லாப்பு?


//Robert said...

பழுத்த மட்டையை பார்த்து குருத்து மட்டை சிரிச்ச கதைதான். இன்று நாம் நமது பெற்றோருக்கு செய்வதுதான் நாளை நமக்கும் என்பதை உணராதவர்கள் இருக்கும் வரை இது நடக்கத்தான் செய்யும். ஆதங்கப்படுவதைத் தவிர வேற என்ன செய்வது???////

நோ செண்டிமென்ட்வோய்... திஸ் இஸ் மாடர்ன் வோல்டு...

//முத்தரசு said...

நெஞ்சை பிழிஞ்சிட்டீரே வெளங்காதவா ////

மாம்ஸு... வரும்போது நல்ல ஒசத்தியானதா வாங்கிட்டு வரவும்.. அப்புறம் இதப்பத்திப் பேசுவோம்.

//சக்கர கட்டி said...

ம்ம்ம் ////

சார், சார்பியல் கொள்கைக்கு எதிரானதல்ல இருத்தியல் அப்புடிங்கரத இந்த "ம்ம்ம்" மூலம் சொல்லிட்டீங்க..... என் அறிவுக்கண்ணைத் (???) டமால்னு ஒடச்சதுக்கு நன்னி!

வெளங்காதவன்™ said...

//s suresh said...

அருமையான கதை! நன்றி!///

அண்ணேன், நாஞ்சொல்ல வந்தத நீனே சொல்லிட்டா எப்புடி?

நாய் நக்ஸ் said...

எங்கையா கருத்து....????

அடப்பாவி....உலக எழுத்தாளர் வரிசைல...பெரிய கியு நிக்கும் போலிருக்கே.....!!!!!!

ezhil said...

அவங்க இறங்கிட்டிருக்காங்க இவரு ஏறிட்டிருக்காரு வார்த்தைகளின் நிகழ்வுகளில் மாற்றம் அருமை...

வெளங்காதவன்™ said...

//நாய் நக்ஸ் said...

எங்கையா கருத்து....????

அடப்பாவி....உலக எழுத்தாளர் வரிசைல...பெரிய கியு நிக்கும் போலிருக்கே.....!!!!!!///

யோவ்......
நீ வேற....


//ezhil said...

அவங்க இறங்கிட்டிருக்காங்க இவரு ஏறிட்டிருக்காரு வார்த்தைகளின் நிகழ்வுகளில் மாற்றம் அருமை...////

அம்மையீர்!
நன்றி!

Padmanaban said...

100% உண்மை!

வெளங்காதவன்™ said...

Deng u all

MADURAI NETBIRD said...

நாம நம்ம பெத்தவங்கள குழந்தையா நினைக்காத போது நம்ம குழந்தைகள் நம்மள எப்படி பெத்தவங்கள நினைக்கும் என்ற நினைப்பு இல்லாதவர்களை என்ன செய்வது.