இணைப்பில்

Showing posts with label வேதனை. Show all posts
Showing posts with label வேதனை. Show all posts

Thursday, July 4, 2013

முத்தாய்ப்பு



இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

கட்.

இடம்- நெகமம்.
நாள்- மிகச்சரியாக இருபத்தைந்து வருடத்துக்கு முன்பு.

“பாருடி. நம்ம பையன் மொதோ ரேங்கு வாங்கியிருக்கான்”, சரசுவிடம் காட்டிக் கொண்டிருந்தான் கருப்புசாமி.
“ஆமா, இங்க பாத்திரங்கழுவ நேரமில்ல. படிக்கிறதப் பாக்க நான் வாரேன்”, இருந்த வெறுப்பை வார்த்தைகளில் உமிழ்ந்தாள் சகதர்மினி.
“எங்கப்பந்தான் என்னிய படிக்க வக்கில.இவனாவது படிக்கவச்சு பெரிய ஆளா வரட்டுமே” தாயின் பேச்சைக் கேட்டு தளர்வாயிருந்த மகனை அரவணைக்கும்படி பேசினான் கருப்பு.
அந்தக் குடிசைக்குக் கதவெல்லாம் இல்லை. அடுப்புப் புகை கண்ணை கசக்க வைக்கும். ஆனாலும், கணேசன் பளீரெனச் சிரித்தபடி விளையாடப்போனான்.
“எங்க அப்பனை என்னால வச்சுக் காப்பாத்த முடியலை. இவன் படிச்சாவது நம்மைக் காப்பாத்தட்டுமே” மனைவியின் பதிலை எதிர்பாராமல் கருப்பு பேசியது முனகலாக கணேசன் காதுக்கு எட்டியது.

கட்.

இடம்- கோவை.
நாள்- இரண்டாயிருத்துப் பத்தின் ஆறாவது மாதத்தின் ஒரு வாரநாள்.

“யூ ஆர் செலக்ட்டேட்; கங்க்ராஜுலேசன்” நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந்தான் கணேசன்.

“தேன்க்யூ வெரிமச் சார், தேன்க் எ லாட்” வார்த்தை வராமல் நீர் மல்கப்பேசினான். கையை நீட்டியவர் அவன் கட்டுப்பாட்டிலிருந்து தன் கையைத் தனதாக்கிக் கொண்டார்.

கட்

இடம்- செஞ்சேரிமலை
நாள்- இரண்டாயிரத்துப் பன்னிரண்டு, கூதிர்கால மாதக் கடைசி.

“பெரியவா யாராவது வந்திருந்தா கூப்பிடுங்கோ. தாலி எடுத்துக்கொடுக்கணும்” ஐயர் அடிநாதமாக முழங்கினார்.
“வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்றோம் சாமி; நீங்களே தாலி எடுத்துக் கொடுங்கோ”வென வேண்டினான் கணேசன்.
அனைத்தும் முடிந்து, அவன் இல்லை இல்லை, அவர்கள் படியில் இறங்கிக்கொண்டிருந்தனர்.

கட்

இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

-வெளங்காதவன்

Tuesday, June 26, 2012

நாடு நாசமாப்போவட்டும்!





சோமாறி நாயுங்க!
ஒரு இந்தியப் பிரஜைய/பொருளாதாரத்தக் காப்பாத்த வக்கில்லா, இவனுங்க ஐரோப்பா பொருளாதாரத்தைக் காப்பாத்தப் போறானுங்கலாம்.

உங்களைத்தாண்டா!
ராமேசுவரத்துல இலங்கைக்காரன் சும்மா சுத்தி சுத்தி அடிக்குறான். நீங்க சுவத்துல சாஞ்சுட்டு நிக்கிறீங்களே முதுகெலும்பு இல்லாதவிங்களா..

என்னமோ போங்கடே!
இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சப்பவே உங்க கட்சிக்காரனே சொன்னான், “காங்.க கலச்சிடலாம்”னு.

எல்லாம் உங்க பாட்டன் பூட்டன் பண்ணுன விதிப்பயன், நாங்க அனுபவிக்க வேண்டியதா இருக்கு!

சத்தியமா சொல்றேன்.... உங்களுக்கு மட்டுமில்ல, உங்க வம்சமே நாசமாப் போகும்.. போயிடும்...

நீங்கெல்லாம் சேந்து மக்களையும் மக்களாட்சியையும் படுகொலை பண்ணுறீங்கடா!

-வெளங்காதவன்

Monday, June 18, 2012

ஜனநாயகம்-கவுஜ!!




நான்கிற்கடுத்தே வரும்,
மையுரிமை!
காந்தி சிரிப்பில் தொலைக்கிறோம்
வாக்குரிமை!
சீமைச் சரக்குகளோடே-
சீவிய சிந்தாமணிகளும்,
சிக்கெடுத்த சிங்காரிகளும்,
சிரித்துச் சிரித்துக் கும்பிடுவர்!
பெண்டிர் எனில் மூக்குத்தி,
பெரிதாயொரு குடம், புடவைகளும்- இப்போதெல்லாம்,
ஃபுல் பாட்டில் பீரும்!
சுத்தமாகும் ரோடும்,
சுமோக்களின் பாடும்!!
ஓட்டுக்கு ஓராயிரமென காலம் மலையேறி,
ஒன்றிரண்டாகி ஒரு கட்சி பலவாகி,
பல இணைந்து ஒன்றாக்கி ஆடுவார்கள் ஆட்டம்!!!
பச்சைக்குதிரை என்று பசபசக்க நின்றிருந்து,
விரலில் மைதடவி,
ஓங்கி ஒரு குத்து வைத்து,
வெளியே வரும்போது, ஒரு பாக்கெட் பிரியாணி!
ஆனதெல்லாம் உன்கணக்கு ஐயாயிரம்!
ஐந்தாண்டு உன்பாடு திண்டாயிடும்!
விலையேற்றம், தட்டுப்பாடு, பணவீக்கம்
பலபேசி உந்தலையில் மிளகரைப்பர்!
எதுவென்னவிலை ஏற்றமாகிவிடினும்,
குவாட்டர் மட்டும்
குடித்துவிட்டு, குப்புறப்படு!



Tuesday, March 13, 2012

உடன்பிறப்பே...


உடன்பிறப்பே,
                        சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் என்னை, இங்ஙனம் ஓர் மடல் வரையக் காலம் கனிந்திருக்கிறது. நானும் நீயும் காத்திருந்த நேரம் இதுதான். சங்கரன் கோவிலிலே இடைத் தேர்தல் வந்துவிட்டது. இருட்டில் விடப்பட்ட ஆட்சியில், நமக்கொரு சவால். சவாலைச் சாதனையாக்குவதில், இந்தத் தலைவனுக்குத் தேவையான தொண்டன் நீ!
 
                       இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு, வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறான் உன் தலைவன். எழுச்சிமிகு வீரனாய், வீறு கொண்டெழுந்து வா! கேட்கிறது உன் மனசாட்சியின் குரல். அதற்கெல்லாம் பதிலளிக்கும் நேரம் இதோ, வந்துவிட்டது. எனினும், பதிலளிக்க இயலாத அளவு பணிச்சுமையுடன் நான் குடும்பத்துக்காய் கட்சிக்காய் அயராது உழைத்து வருகிறேன் என்பதை நீயறிவாய்.

                        காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே. அப்போது நான் எழுதாத கடிதமில்லை, அனுப்பத தந்தியில்லை என்பதை கழக உடன்பிறப்பே நீயறிவாய். ஆம், இனப் படுகொலைக்கு எதிராய், முதன்முதலில் திருவாய் மலர்ந்தவன் நான்தான். மத்திய சர்க்காருக்கு நான் கொடுத்த நெருக்கடி தாங்காமல்தான், போர் நிறுத்தம் அறிவித்தார்கள் என்பதை இந்த உலகமே அறியும்.

                        இதோ, இப்போது ஐக்கிய நாடுகள் சபையினிலே லங்கைப்போருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்தது அமெரிக்கா. மாற்றினத்தவன் கொடுக்கும் ஆதரவைக் கூட, நீயும் நானும் கொடுத்த/கொடுக்கும் ஆதரவைக் கூட, மத்திய அரசு தராதது கண்டு, வெகுண்டேழுகிறேன் உடன்பிறப்பே!

                        போர் மேகங்கள் திரண்டிருந்த வேளையிலே, நான் உன் பணியாற்ற எமது சட்டசபையிலே தீர்மானம் போட்டுக்கொண்டிருந்தேன் என்பதை நான் சொல்லாமலே நீ அறிவாயடா எனதருமை உடன்பிறப்பே. வரலாற்றைத் திரித்துக் கூறும் கருங்காலிகளுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்"

- மனசாட்சியைக் கழற்றிவைத்துவிட்டு,

மு.க.






டிஸ்கி:-வேதனைகளை சீரியசான வார்த்தைகளாக்கும் கலை இன்னும் கைவரப் பெறவில்லை. மன்னியுங்கள்!