இணைப்பில்

Tuesday, March 6, 2012

இதையே 'தலைப்பு'ன்னு வச்சுக்க!


ஹல்லோ மக்காள்ஸ்...
அவ் ஆர் யூ?
என்னடா இவன் இங்கிலீசுல பேசுறான்னு பாக்குறீயளா?
அது இனிமே அப்புடித்தேன்...
ஆங்.. அப்புறம்??
மத்திய அரசாங்கம் நாலாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டை  அவிங்க ஆட்சியிலையே ஏலம் விடுவாங்கன்னு நூசு சொன்னான் சின்ராசு...

தக்காளிங்க..

இன்னும் மூணாவது தலைமுறை அலைக்கற்றைக்கான கட்டுமானம் முழுமை அடையல... ரெண்டாம் தலைமுறை அலைக்கற்றை பண்ணின அட்டகாசம் இன்னும் அடங்கல...

வந்துட்டாங்க, நாலாம் தலைமுறை பத்திப் பேச!!!

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க சார், "புள்ளப் பெத்துக்கல, பேரு வைக்கப் போறானாம்"னு..

ம்ம்ம்.. அப்புறம் அஞ்சு மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன... ரெண்டில் , நம் ஆளும் மத்திய அரசான, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என்பது என் எண்ணம்(இன்னும் கவுண்டிங் போயிட்டு இருக்கு)...

ஆக, இந்த எலக்சன் முடிஞ்சதுக்குப் பொறவு பெட்ரோலு வெலை ஏறும்னு பட்சி சொல்லுது..


அப்புடியே, இந்த எலைட் பார் அமைப்பது பற்றி அரசாங்கம் இன்னும் முழுமையான முடிவு எடுக்காதது, குடி மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே!!!


அப்புறம், காமன் வெல்த் ஊழல்-நு ஒன்னு நடந்துது இல்ல?? அதன் முக்கிய ஆவணங்கள் கெடைக்காம திண்டாடுராங்கலாம்... வாழ்க ஜனநாயகம்...
____________________________________________________________________________________
மின்தடை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில்(சென்னையை விடுத்து மற்ற எல்லா இடங்களிலுமே) பல்வேறு தரப்பட்ட தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. அதில், முதுகெலும்பான விவசாயம், மிக அகோரமான முறையில் நலிவடைகிறது. நீர் வளம் பெருக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத தமிழக அரசு மின்வளத்தையும் சுரண்டுவது, எம்போன்ற விவசாயிகளை மீளப் பெருந்துயரில் ஆழ்த்துவதுடன், இந்தத் தலைமுறையினருக்கு உணவளிக்க இயலாத பெரும் சாபத்திற்கும் ஆளாகும்.

________________________________________________________________________________________________
ரொம்ப முக்கியமான விஷயம்...


தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள்.

________________________________________________________________________________________________
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..

2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்

 

(கொஞ்சம் பிசியா இருந்தேன்.. இனி அடிக்கடி சந்திக்கலாம்)
-வெளங்காதவன்.

Saturday, January 28, 2012

கருப்புப் பணமும், கருங்காலிகளும்...

சார்.. வணக்கம் சார்!!!!
நீ நல்லா இருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும் சார்....
பின்ன, இந்த வருஷத்தோட ஒலகம் அழியப்போவுதுன்னு எவனாவது சொன்னாலும், 2016 ல எங்க ஆட்சிதான்-னு சொல்லிப் பெருமைப்படுற நீ, என்னைக்குமே நல்லா இருப்ப சார்....
ஆங்.....
மேட்டருக்கு வருவோம்..
இந்தக் கறுப்புப் பணம், கருப்புப் பணம்னு சொல்றாங்களே, அது கருப்பா இருக்குமான்னு கேக்குற ரகம் சார் நானு... ஆனா, கீழே இருக்குற டீடைலப்பார்த்தா, அது கருப்பா இருந்தாலும் வெளுப்பா இருந்தாலும் பணம் பணம்தான் சார்....

சார்... மேலே இருக்குற படத்தப் பாத்துட்டு, அதுல இருக்குற ஆளுங்கள மேலே உனக்கு சராமாரியா கோவம் வருதா சார்?
நீதான் சார் நம்ம ஆளு... (கோவம் வராதவங்க எல்லாம் வூட்டாண்ட வாங்க சார்.... இந்தக் கருமத்தையெல்லாம் படிக்க வேணாம்...) நீ வா சார்.. நாம அடுத்த பாராவுக்குப் போவம்...
"சார்.. வூட்ல எல்லாம் சவுக்கியமா?"
"....."
"சார்.. கொயந்தைங்க என்ன பண்ணுது சார்?"
"....."
"சார்.. நான் பாட்டுக்குக் கேட்டுக்கினு இக்கீறேன்.. நீ மடமடன்னு எங்க சார் போற?"
"......"
"சார்... நில்லு சார்....இந்தக் கருப்புப் பணம் வச்சு இருக்குறவங்க மேல ஏன் கோவம் சார்?"
"......"
"சார் சொல்லு சார்... தேசத்தின் பணத்தைக் கொள்ளை அடிச்சாங்கன்னு கோவப்படுறீயலா?"
"அடப்போய்யா.... நானும் எப்புடி எப்புடியெல்லாமோ சம்பாதிச்சுப் பாக்குறேன்.. ஆனா, கோவணத்துல ஒரு கட்டிங் காசுக்கு மேல நிக்க மாட்டீங்குது.. ஆனா, இவிங்க மட்டும் எம்புட்டு சூதானமா இம்புட்டுப் பணத்த சேத்தாங்கன்னு கோவம்யா... நீ வேற எங்கிட்ட வந்து வாயக் கெளரிட்டு..."
"??????"
******************************************************************************
சார்... நான் கருங்காலின்னு சொன்னது, அந்த லிஸ்டுல இருக்குற ஆளுங்களைன்னு நெனச்சா.... நீ சரியான முட்டாக் கொரங்கு சார்.......
அந்தப் புண்ணியவான்களுக்கும், தமிழ்க் காவலர்களுக்கும், அப்புறம் மத்த எல்லாருக்கும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தேடுத்தியே... இனிமே தேர்ந்தெடுக்கவும் போறியே... நீதான் சார் அந்தக் கருங்காலி...
ஆங்... இன்னுமொண்ணு.... 
எலைட் பார்ல சரக்கு வெலை அதிகம்னு போராட்டம் பண்ணக் கூப்பிடுவாக!!! குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசப்பட்டுப் போயிடாத சார்!!! 'எடா'ன்னு ஒரு சட்டம் தயாராகிட்டு இருக்கு சார்!!!!


முடிஞ்சு போன புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு நாள் வாழ்த்துக்களுடன்,
-வெளங்காதவன்.