இணைப்பில்

Sunday, October 30, 2011

குழப்பம் (சவால் சிறுகதை-2011)


குறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை.

சிவா தன் கையில் இருந்த இரண்டு துருப்புச் சீட்டுக்களையும் பார்த்துக் குழம்பிக்கொண்டிருந்தான். அதே நேரத்தில் விஷ்ணுவின் அழைப்பு வரவும், தன் தலைமுடியைக் கோதிவிட்ட இடக்கையால் போனைப் பார்த்தான். அதில் தன் பிம்பம் காட்டும் ஸ்க்ரீனை வெறித்தபடி, மீண்டும் குழப்பத்தில் ஆள்ந்தான்...

இதற்குள், இந்தக் கதைக்கு சம்பந்தமான ஆளுங்களைப் பார்த்திடுவோம்.
விஷ்ணு- இவன் ஒரு கல்லூரிப் பையன். மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படிப்பதாக ஞாபகம். சிவா ரூட் விடும் பெண்ணின் பக்கத்து வீடு என்பதால், இவனை கடந்த இரண்டு வருடங்களாகக் சிவாவுக்குத் தெரியும்.

எஸ்.பி. கோகுல்- சூலூர் சமஸ்தானத்திலே பழனிச்சாமி- உமா ஆகியோரின் ஒரே மகன். பெரிய அரசியல்வாதி. ஆங், இவர்தான் சிவா ரூட் விடும் பிகரின் அப்பா. 

கீதா- இவள்.... இவள்..... சிவாவின் கனவுக் கண்ணி. எஸ்.பி.கோகுலின் உயரத்தையும், பேரழைகையும் கொண்டிருந்தாள். கொஞ்சம் மாநிறம். எனினும், சிவாவுக்கு அவளைப் பிடித்தே இருந்தது.
வருத்தமற்ற நொடிகள்
ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,
உன் செவ்விதழ் சிந்தும்
முத்தத்திற்காய்!”
என்றெல்லாம் அவனைக் கவிதை எழுத வைத்த வித்தைக்காரி.

இப்போ, சிவாவின் குழப்பத்துக்குக் காரணம் தேடிப் போவோமா?

பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பே, சிவா தன் காதலை அவளிடம் சொல்லியிருந்தான். அவளும் சம்மதிக்கவே, நிதமும் அவளுடன் கடலை போட்டுவந்தான். சிவாவுக்கு ஏழரை உச்சத்தில் இருந்த நேரம், அவளின் பிறந்தநாள் வந்தது. அவனும் அவளுக்கு ஒரு செல் போன் வாங்கி பிரசண்ட் பண்ணினான்.

அதுல வந்தது வினை. பிறந்தநாளுக்கு அடுத்த ரெண்டு நாள், புது போனுல கடலை போச்சு. இப்போ, அந்த போனு அவிங்க அப்பன் கையுல. பொறவுதான் அவிங்க அப்பன் கூப்பிட்டான் சிவாவை. போச்சு, தெரிஞ்சு போச்சு. அதனால குடும்பத்தோட போயிப் பொண்ணுக் கேட்கப் போயிட்டான் சிவா.

ஒரு வழியா கண்ணாலத்துக்கு ஏற்பாடும் ஆயிடுச்சு. பொறவு? அரசியல்வாதியின் மக ஆச்சே. ஓடிப்போயிக் கண்ணாலம் பண்ணுனா கேவலம்னு, அரேஞ்சுடு மேரேஜூக்கு சம்மதம் சொல்லிட்டாரு.

இப்புடியான நெலைமைலதான், விஷ்ணு இப்புடி ரெண்டு துருப்புச்சீட்ட தயாரிச்சு இருக்கான். அவன் பர்சு, சிவாவோட பேக்ல வச்சிருந்ததாலையும், அடுத்தவன் பர்சனல நோண்டுற புத்தி இருந்ததாலையும், இந்த ரெண்டு சீட்டும் கெடச்சுது சிவாவுக்கு.

மீண்டும் விஷ்ணுவின் கால். இரு விஷ்ணுவையே கேப்போம்னு அட்டெண்ட் பண்ணினான் சிவா. “ஹலோ” என்ற சம்பிரதாயமான வார்த்தையை உதிர்த்தான் சிவா.

இணைப்பு உடனே துண்டிக்கப்பட்டது.

சிவா, மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.

“S W H2 6F- என்பது முறையே Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F) என்பதையும், மற்றொரு சீட்டு, சிவாவின் பரம எதிரி தினகருக்கு (சிவாவின் ஆளை கண்ணாலம் பண்ண முன்பு ஒரு காலத்தில் ரூட் போட்டவன்) என்பதையும் சிவா கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை.

கதை முடிவு இது தான். சிவா எப்படி என விஷ்ணுவிடம் கேட்க, அவன் பிறகு சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு, தினகருடன் சேர்ந்து கண்ணாலத்தை நிறுத்த பிளான் பண்ணி இருந்தான்(அவனுக்கு என்ன பொறாமையோ?). அதனால், சிவா ஒரு குடிகாரன் என்ற பொய்யைக் கொண்ட ஒரு குறிப்பால் உணர்த்த விரும்பினான் விஷ்ணு. மற்றொரு சீட்டை, தினகருக்கும் அனுப்ப எத்தனித்தான் போலும். பாவம், அவர்களின் திட்டம். இப்போது அந்தச் சீட்டுகள் சிவாவைக் குழப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

சிவா-கீதா திருமணம் இனிதே முடிவுற வாழ்த்துக்களுடன்,

-வெளங்காதவன்.

42 comments:

நம்பிக்கைபாண்டியன் said...

“S W H2 6F- என்பது முறையே Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F)
இது நல்லாருக்கு,
கதையை முடிப்பதில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.வாழ்த்துக்கள்!

கோகுல் said...

குறிப்புக்கான விளக்கம் அடடா!

வெளங்காதவன்™ said...

//நம்பிக்கைபாண்டியன் said...

“S W H2 6F- என்பது முறையே Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F)
இது நல்லாருக்கு,
கதையை முடிப்பதில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.வாழ்த்துக்கள்!///

ஹி ஹி ஹி...

கை அறிச்சுதுன்னு எழுதுனேன் அண்ணே!

நன்றி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சோடாவும் வாட்டரும்.... அட அட அடடடா.. எங்கேயோ போயிட்டீங்கண்ணே......

வெளங்காதவன்™ said...

//கோகுல் said...

குறிப்புக்கான விளக்கம் அடடா!//

ஏதோ, நம்மால முடிஞ்சுது....
ஹி ஹி ஹி...

வெளங்காதவன்™ said...

//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

சோடாவும் வாட்டரும்.... அட அட அடடடா.. எங்கேயோ போயிட்டீங்கண்ணே.....///

இதை எழுதக் காரணம் நீங்கதேன்....
எல்லாப் புகழும் பன்னி அண்ணாச்சிக்கே!

மகேந்திரன் said...

கதை ஜனரஞ்சகமா இருக்கு நண்பரே...
வெற்றிபெற வாழ்த்துக்கள்.

வெளங்காதவன்™ said...

//மகேந்திரன் said...

கதை ஜனரஞ்சகமா இருக்கு நண்பரே...
வெற்றிபெற வாழ்த்துக்கள்.///

நன்றிண்ணே!

வெளங்காதவன்™ said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

// “S W H2 6F- என்பது முறையே
Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F) //

வாவ்.. வாவ்.. வாவ்..!!

இந்த விளக்கத்துக்காகவாவது இந்த
கதைக்கு பரிசு கொடுத்தே ஆக வேண்டும்
என்று திரு.பரிசல் + ஆதி அவர்களுக்கு
சிபாரிசு செய்கிறேன்.!

SURYAJEEVA said...

எல்லா சவால் கதையும் படிச்சுட்டேன்... உங்கள மாதிரி கரெக்டா யாருமே அந்த குறியீட்டுக்கு விளக்கம் தரல... உடான்ஸ் கதை தேர்வு குழுவினர் தான் பாவம்... நான், நீங்க மற்றும் பன்னிகுட்டி சார் கதைய படிச்சாங்க, செத்தாங்க

Madhavan Srinivasagopalan said...

அருமை, நீங்க போட்டில கலந்துக்கிட்டது..
பொறுங்க.. படிச்சிட்டு வாரேன்.

வெளங்காதவன்™ said...

//வெங்கட் said...

// “S W H2 6F- என்பது முறையே
Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F) //

வாவ்.. வாவ்.. வாவ்..!!

இந்த விளக்கத்துக்காகவாவது இந்த
கதைக்கு பரிசு கொடுத்தே ஆக வேண்டும்
என்று திரு.பரிசல் + ஆதி அவர்களுக்கு
சிபாரிசு செய்கிறேன்.!
///

அஹம் பிரம்மாஸ்மி...

வெளங்காதவன்™ said...

//suryajeeva said...

எல்லா சவால் கதையும் படிச்சுட்டேன்... உங்கள மாதிரி கரெக்டா யாருமே அந்த குறியீட்டுக்கு விளக்கம் தரல... உடான்ஸ் கதை தேர்வு குழுவினர் தான் பாவம்... நான், நீங்க மற்றும் பன்னிகுட்டி சார் கதைய படிச்சாங்க, செத்தாங்க///

ஹி ஹி ஹி....
உண்மைதான் சார்.....

வெளங்காதவன்™ said...

///Madhavan Srinivasagopalan said...

அருமை, நீங்க போட்டில கலந்துக்கிட்டது..
பொறுங்க.. படிச்சிட்டு வாரேன்.///

ஹி ஹி ஹி.. வாங்கண்ணே!

#அங்க செவண்டி பிளஸ் ஓட்டு வாங்கிய ரகசியம் சொல்லவும்...அவ்வ்வ்வ்வ்வ்...

வெளங்காதவன்™ said...

:-)

MANO நாஞ்சில் மனோ said...

வெளங்காதவன் எழுதிய அருமையான சிறு கதை சவால் போட்டி, நடக்கட்டும் நடக்கட்டும்...

இராஜராஜேஸ்வரி said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

வெளங்காதவன்™ said...

@மனோ-
ரைட்டு....

வெளங்காதவன்™ said...

//இராஜராஜேஸ்வரி said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்.///

வெற்றிபெறவெல்லாம் எழுதலை மேடம்...

எனினும் வாழ்த்துக்கு நன்றிகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

களத்தில் நீங்களும் இறங்கிட்டிங்கலா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

லித்தியாசமான சிந்தனை..
தங்கள் பாணியில்...

வெற்றி பெற வாழ்த்துக்கள்....

ADMIN said...

வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.. வித்தியாசம் தான் என்றுமே கண்ணிற்கு புலப்படும்.. அவ்வகையில் நீங்கள் அனைவருக்கும் புலப்படுவீர்கள்..!!

வாழ்த்துகள்...!!

ADMIN said...

எனது வலையில் இன்று:

தமிழ்நாடு உருவான வரலாறு

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

ADMIN said...

உங்கள் வலைப்பூவிலும் பின்தொடர்பாவராக இணைந்துவிட்டேன்..

வெளங்காதவன்™ said...

//கவிதை வீதி... // சௌந்தர் // said...

களத்தில் நீங்களும் இறங்கிட்டிங்கலா...
///

இல்லைங்க.... நேத்து ராத்திரி பன்னி அண்ணன் சொறிஞ்சுவிட்டுட்டாரு அதேன்...

ஹி ஹி...

நல்லா இருந்தாலும், மோசமா இருந்தாலும், எல்லாப் புகழும் ப.ரா. அண்ணனுக்கே....

வெளங்காதவன்™ said...

//வைரை சதிஷ் said...

super story///

ரைட்டு அப்பு!

வெளங்காதவன்™ said...

//தங்கம்பழனி said...

உங்கள் வலைப்பூவிலும் பின்தொடர்பாவராக இணைந்துவிட்டேன்..///

என்னவொரு வில்லத்தனம்?

#ஹி ஹி ஹி... நன்றி...

வைகை said...

வெளங்காதவன் said...


இல்லைங்க.... நேத்து ராத்திரி பன்னி அண்ணன் சொறிஞ்சுவிட்டுட்டாரு அதேன்.//

ஹி..ஹி..அப்ப நாங்க சொறிஞ்சத பத்தியும் ஒரு பதிவு போடு மச்சி :))

வெளங்காதவன்™ said...

//வைகை said...

வெளங்காதவன் said...


இல்லைங்க.... நேத்து ராத்திரி பன்னி அண்ணன் சொறிஞ்சுவிட்டுட்டாரு அதேன்.//

ஹி..ஹி..அப்ப நாங்க சொறிஞ்சத பத்தியும் ஒரு பதிவு போடு மச்சி :))///

யோவ்.... ஒரு பஸ்சு விட்டேன்... அங்கயும் "நாகா" குறிபாத்துத் தாக்குது... இனியும் தாங்காது மச்சி.. அப்புறம், தக்காளிச் சட்னிதான்...

Unknown said...

மாப்ள சரக்கடிச்சிகிட்டே கதை எழுதினியா ஹிஹி நல்லாருக்கு அதேன் கேட்டேன்!

வெளங்காதவன்™ said...

/விக்கியுலகம் said...

மாப்ள சரக்கடிச்சிகிட்டே கதை எழுதினியா ஹிஹி நல்லாருக்கு அதேன் கேட்டேன்!//

இல்ல மாம்ஸு.....நாளு நாளா விரதம்...
இன்னும் ஒரு கதை இருக்கு....
மொராக்கோ சலவைக்காரி'ன்னு....
ஆனா, அது அடல்ட் ஒன்லி கதை... அதனால போடல....ஹி ஹி ஹி....

அம்பாளடியாள் said...

கதை அருமை வாழ்த்துக்கள் வெற்றி பெற .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

சி.பி.செந்தில்குமார் said...

உனக்கு பரிசு கிடைச்சா பரிசுல பாதி எனக்கு. எனக்கு பரிசு கிடைச்சா மொத்தம் எனக்கே எனக்கு. எப்புடி நம்ம டீலிங்க்

வெளங்காதவன்™ said...

//சி.பி.செந்தில்குமார் said...

உனக்கு பரிசு கிடைச்சா பரிசுல பாதி எனக்கு. எனக்கு பரிசு கிடைச்சா மொத்தம் எனக்கே எனக்கு. எப்புடி நம்ம டீலிங்க்///

ஹா ஹா ஹா....
ரைட்டுன்னே!

அம்பாளடியாள் said...

உனக்கு பரிசு கிடைச்சா பரிசுல பாதி எனக்கு. எனக்கு பரிசு கிடைச்சா மொத்தம் எனக்கே எனக்கு. எப்புடி நம்ம டீலிங்க்///

சபாஸ் அருமையான டீலிங்!.....எப்புடி சார் யோசிக்குறீங்க?..... ஹி......ஹி ...ஹி ..........

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ம.தி.சுதா said...

///சிவாவுக்கு ஏழரை உச்சத்தில் இருந்த நேரம், ///

ஆகா காதல் வந்தாலே ஏழரை என்ன எட்டரை உச்சத்துக்கு வந்துடுமே அண்ணாச்சி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

rajamelaiyur said...

அருமையான கதை .. வெற்றி பெற வாழ்த்துகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

நெல்லி. மூர்த்தி said...

அட.... கதையிலயும் கலக்கிட்டீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

சீனுவாசன்.கு said...

நம்ம தளம் பக்கமும் எப்பவாச்சுமாவது வாங்க!
கருத்து சொல்லுங்க!தப்பாச்சும் கண்டு புடிங்க!
என்ன நான் சொல்றது?