இணைப்பில்

Wednesday, December 7, 2011

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்...

       "சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

      ஆக்கம் எவனோ உயிர்க்கு."

என்று கூறிய வள்ளுவனை வன்மையாகக் கண்டித்து, எனது உரையைத் தொடங்குகிறேன்.

வலையுலகில் சஞ்சரிக்கும் சராசரி தாண்டிய ஜீவன்களே!!!! நீங்கள் மத, இன துவேஷங்களைப் பரப்புகிறீர்கள். நீங்கள் செல்லும் பாதை சரியல்ல. இது போன்ற துவேஷங்களைத் தடை செய்யக்கோரி நாங்கள் சமூக வலைதளங்களைக் கண்டிக்கும் அதே வேளையில், அவர்களாகவே சென்சார் செய்து வெளியிட நிர்பந்திக்கிறோம். இல்லையெனில், எங்கள் அன்னை தலைமையிலான ஆட்சியில், அதற்காக விதிமுறைகளை உருவாக்குவோம்.

உண்மையைச் சொன்னால், மத இன துவேஷங்களைச் செய்வதாலே இதைச் செய்கிறோம் என எங்கள் கருத்துக்கு வரவேற்புத் தரும் அனைவருக்கும், இன்கம் டேக்சை குறைக்க வழிவகை செய்யும் சட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆனால், காமன்வெல்த் ஊழல், 2G ஊழல், கம்யூனிகேசன் இணைப்பு, சுரண்டல் இந்த வார்த்தைகளை உபயோகித்துச் செய்தி பரப்புபவர்கள் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளவும், சட்ட ஆலோசகர்களை வைத்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மேலும், முன்னணிப் பத்திரிகைகள் பல எங்களிடம் விலைபோயிவிட்டதால், இனி, இந்தியாவில் செயல்படும் பல சமூக வலைதலங்களையும் நமது கட்சியோ, அல்லது அரசோ வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விற்கத் தயங்கும் தள அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, தனி குண்டர் படை முடிக்கிவிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மீடியா என்ற கேட்டகிரியில் வரவே வராது; அது நட்பு வட்டம், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், கலை இவற்றையெல்லாம் தாண்டி டேட்டிங் வரை பறந்து விரிந்துள்ளது. இவ்வாறான, வலைகளில் அரசியல் பேசுவது குற்றம். அவ்வாறு பேசினாலும், எங்கள் பிரதமர், அன்னை போன்றோரைப் பற்றிய தவறான படங்களை வெளியிடுதல் மிகப்பெரும் குற்றம்.

இந்தியாவுக்கு இதற்கா சுதந்திரம் கொடுத்தான் வெள்ளையன்? இதற்காகவா மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு போன்றோர் பாடுபட்டனர்? இதற்காகவா நம் “காங்கிரஸ்” தோற்றுவிக்கப்பட்டது?

இல்லை.. இல்லை... இல்லவே இல்லை.....

ஆகவே, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க சமூக வலைகளில் நம் அரசின் தலையீடு அவசியமாகிறது. இது ஏன் எனக் கேட்கத்துடிக்கும், பா.ஜ.க. க்காரர்களிடம் கேட்கிறேன், “உங்களைப் பற்றிய அவதூறுகளை எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்வீர்?”. எனினும், நீங்கள் வெளியிடும் பவர் ஸ்டார், கேப்டன் மற்றும் அணில் போன்றோரின் படங்கள் சென்சார் இன்றி வெளியிடவும் ஆவண செய்யப்படும்.

ஒரே செய்தியை அழுத்திக் கூறுவதால், அது பொய்யாக இருக்குமோ என்று தொண்டர்கள் எண்ணுவது அச்சமாக இருக்கிறது. திரும்பத் திரும்பக் கூறுவது, அதன் அவசியத்தை வலியுறுத்தவே.

ஆனால், இந்தச் சமூக வலைதளங்களுக்கு என்னவொரு ஏளனம்? நாம் நடத்தும் ஆட்சியில், நமது கோட்பாடுகளை ஏற்காமல், “அமெரிக்காவில் எப்படியோ இங்கும் அப்படி” என்னும் ஏகாதிபத்திய மனநிலையில் அவர்கள் உள்ளனர். இவர்களையெல்லாம் தொண்டர்களாகிய நீங்கள் நினைப்பதுபோல் இம்மீடியட்டா ஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், பொதுக்குழு கூட்டி முடிவெடுப்போம்.

சமூக வலைத்தளங்களின் அராஜகம், நமது ஆட்சியில் ஒழியப்போகிறது என்று நினைத்தால், அனைத்து உறுப்புகளுள் சந்தோசத்தில் சிறகடித்துப் பறக்கின்றன.

ஆதலால், அனைத்து வலையுலக சஞ்சரிகளே!!!!

அன்னையின் தலைமையில் ஒன்றிணைவோம்...

எதிர்த்திடுவோம் அராஜகத்தை.....

ஒழித்திடுவோம் சமூக வலைத்தளங்களை!!!!!!!வாழ்க ஜனநாயகம்.....

இங்ஙனம்,

அடிப்பொடி காங்கிரஸ் தொண்டன்,

வெளங்காதவன்.

25 comments:

NAAI-NAKKS said...

Lol.....

NAAI-NAKKS said...

Ivanga athukku sari pattu
varamattanga.....

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

Ivanga athukku sari pattu
varamattanga.....///

ஒண்ணுமே புரியலைன்னு சூசகமா சொல்லுறீயலா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இது மரண நையாண்டி..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இந்தியாவுக்கு இதற்கா சுதந்திரம் கொடுத்தான் வெள்ளையன்? இதற்காகவா மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு போன்றோர் பாடுபட்டனர்? இதற்காகவா நம் “காங்கிரஸ்” தோற்றுவிக்கப்பட்டது?
// இது நக்கலின் உச்சக்கட்டம்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவு நகைச்சுவையாக இருந்தாலும் விஷயம் மிகவும் சீரியஸ் ஆனது..

இதைப்பற்றிய விழிப்புணர்வு தேவை.. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ இந்த காங்கிரஸ் அரசு..

NAAI-NAKKS said...

Kai.,,,kaal,,,-----seyalpadaathu....
Vaai---pesthu....
Kaathu kettkaathu....
Kannum,,,,kakka....---ithu
2m than seyalpadum.....
Athanppa

PRIME MINISTER.....

ENNATHA SOLLI ENNN AAGAPOVUTHU.....???????

விக்கியுலகம் said...

எனக்கென்னமோ ஆடு தானே வெட்ட சொல்லுதுன்னு நெனைக்கிறேன் ஹிஹி!

மனசாட்சி said...

என்னைக்கா இருந்தாலும் எங்க கிட்ட வந்து தான் ஆகணும்..

அது வரைக்கும் ஆடு செல்லம் ஆடு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லைத்தாண்டாத வரை எல்லாம் நல்லதுதான்..


எல்லையை மீறும் பேர்து பொருத்துக்கொள்ள முடியாது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அன்னை வாழ்க, தானைத்தலைவன் வளர்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நீங்கள் வெளியிடும் பவர் ஸ்டார், கேப்டன் மற்றும் அணில் போன்றோரின் படங்கள் சென்சார் இன்றி வெளியிடவும் ஆவண செய்யப்படும்.
///

தமிழகத்தை ஓட்டுமொத்தமாக காலி செய்யும் விஷமத்தனமான முயற்சியை வன்மையாக கண்டிக்கிறேன்.

வெங்கட் said...

// இனி, இந்தியாவில் செயல்படும் பல சமூக வலைதலங்களையும்
நமது கட்சியோ, அல்லது அரசோ வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விற்கத் தயங்கும் தள அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த,
தனி குண்டர் படை முடிக்கிவிடப்பட்டுள்ளது. //

ஹா., ஹா., ஹா..!!
குண்டர் படையா..!?! ஏதுக்கு..?
ஒருவேளை பேச்சு வார்த்தை சுமூகமா
முடியலைன்னா..முடிக்கவா..!?!

ViswanathV said...

விலைவாசி ஏற்றம், ஊழல்,
கறுப்புப் பணம் இந்தப்
பிரச்சனைகளையெல்லாம்
பின் தள்ளவே
இதை நா ஆரம்பிச்சிருக்கே,
அதை (FDI ) அவர் (SINGH) ஆரம்பிச்சிருக்காரு;
- கபில் சிபல்

வெளங்காதவன் said...

//Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவு நகைச்சுவையாக இருந்தாலும் விஷயம் மிகவும் சீரியஸ் ஆனது..

இதைப்பற்றிய விழிப்புணர்வு தேவை.. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ இந்த காங்கிரஸ் அரசு..////

:-)

வெளங்காதவன் said...

///NAAI-NAKKS said...

Kai.,,,kaal,,,-----seyalpadaathu....
Vaai---pesthu....
Kaathu kettkaathu....
Kannum,,,,kakka....---ithu
2m than seyalpadum.....
Athanppa

PRIME MINISTER.....

ENNATHA SOLLI ENNN AAGAPOVUTHU.....???????////

இப்புடியே பேசிட்டு இருந்தா குண்டர் சட்டம் பாயும்.... மைன்ட் இட்.....

வெளங்காதவன் said...

///விக்கியுலகம் said...

எனக்கென்னமோ ஆடு தானே வெட்ட சொல்லுதுன்னு நெனைக்கிறேன் ஹிஹி!////

ஹி ஹி ஹி...
வாங்க மாம்ஸ்...

வெளங்காதவன் said...

//மனசாட்சி said...

என்னைக்கா இருந்தாலும் எங்க கிட்ட வந்து தான் ஆகணும்..

அது வரைக்கும் ஆடு செல்லம் ஆடு////

அது சரி அது சரி....
:-)

வெளங்காதவன் said...

//கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லைத்தாண்டாத வரை எல்லாம் நல்லதுதான்..


எல்லையை மீறும் பேர்து பொருத்துக்கொள்ள முடியாது...////

எல்லைதாண்டி வெகு காலமாச்சு!!!!!

வெளங்காதவன் said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

அன்னை வாழ்க, தானைத்தலைவன் வளர்க.......////

ஐயோ.... ஆம்மாம்யா...
இத சொல்ல மறந்துட்டனே!!!!!

வெளங்காதவன் said...

//வெங்கட் said...

// இனி, இந்தியாவில் செயல்படும் பல சமூக வலைதலங்களையும்
நமது கட்சியோ, அல்லது அரசோ வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விற்கத் தயங்கும் தள அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த,
தனி குண்டர் படை முடிக்கிவிடப்பட்டுள்ளது. //

ஹா., ஹா., ஹா..!!
குண்டர் படையா..!?! ஏதுக்கு..?
ஒருவேளை பேச்சு வார்த்தை சுமூகமா
முடியலைன்னா..முடிக்கவா..!?! ///

:-)

வெளங்காதவன் said...

//ViswanathV said...

விலைவாசி ஏற்றம், ஊழல்,
கறுப்புப் பணம் இந்தப்
பிரச்சனைகளையெல்லாம்
பின் தள்ளவே
இதை நா ஆரம்பிச்சிருக்கே,
அதை (FDI ) அவர் (SINGH) ஆரம்பிச்சிருக்காரு;
- கபில் சிபல்///

:-)
:-(

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா....அப்படிப்போடு அருவாளை!!

Ruthra said...

சூப்பர் தலைவா
நேசமுடன்
ருத்ரா

veedu said...

இனி நம்மளை நாமே கிண்டல் செய்துக்கலாம்...சிபில் பேஸ்புக் கணக்கில போய்...
மாப்ளை சிபிலு நச்!!
அருமை உம்மேல ஏறனும் எருமை!அப்படின்னு கமெண்ட் போடலாம் எப்படிங்க நம்ம ஐடியா?