இணைப்பில்

Tuesday, March 13, 2012

உடன்பிறப்பே...


உடன்பிறப்பே,
                        சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் என்னை, இங்ஙனம் ஓர் மடல் வரையக் காலம் கனிந்திருக்கிறது. நானும் நீயும் காத்திருந்த நேரம் இதுதான். சங்கரன் கோவிலிலே இடைத் தேர்தல் வந்துவிட்டது. இருட்டில் விடப்பட்ட ஆட்சியில், நமக்கொரு சவால். சவாலைச் சாதனையாக்குவதில், இந்தத் தலைவனுக்குத் தேவையான தொண்டன் நீ!
 
                       இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு, வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறான் உன் தலைவன். எழுச்சிமிகு வீரனாய், வீறு கொண்டெழுந்து வா! கேட்கிறது உன் மனசாட்சியின் குரல். அதற்கெல்லாம் பதிலளிக்கும் நேரம் இதோ, வந்துவிட்டது. எனினும், பதிலளிக்க இயலாத அளவு பணிச்சுமையுடன் நான் குடும்பத்துக்காய் கட்சிக்காய் அயராது உழைத்து வருகிறேன் என்பதை நீயறிவாய்.

                        காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே. அப்போது நான் எழுதாத கடிதமில்லை, அனுப்பத தந்தியில்லை என்பதை கழக உடன்பிறப்பே நீயறிவாய். ஆம், இனப் படுகொலைக்கு எதிராய், முதன்முதலில் திருவாய் மலர்ந்தவன் நான்தான். மத்திய சர்க்காருக்கு நான் கொடுத்த நெருக்கடி தாங்காமல்தான், போர் நிறுத்தம் அறிவித்தார்கள் என்பதை இந்த உலகமே அறியும்.

                        இதோ, இப்போது ஐக்கிய நாடுகள் சபையினிலே லங்கைப்போருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்தது அமெரிக்கா. மாற்றினத்தவன் கொடுக்கும் ஆதரவைக் கூட, நீயும் நானும் கொடுத்த/கொடுக்கும் ஆதரவைக் கூட, மத்திய அரசு தராதது கண்டு, வெகுண்டேழுகிறேன் உடன்பிறப்பே!

                        போர் மேகங்கள் திரண்டிருந்த வேளையிலே, நான் உன் பணியாற்ற எமது சட்டசபையிலே தீர்மானம் போட்டுக்கொண்டிருந்தேன் என்பதை நான் சொல்லாமலே நீ அறிவாயடா எனதருமை உடன்பிறப்பே. வரலாற்றைத் திரித்துக் கூறும் கருங்காலிகளுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்"

- மனசாட்சியைக் கழற்றிவைத்துவிட்டு,

மு..


டிஸ்கி:-வேதனைகளை சீரியசான வார்த்தைகளாக்கும் கலை இன்னும் கைவரப் பெறவில்லை. மன்னியுங்கள்!

38 comments:

Madhavan Srinivasagopalan said...

மொய் அவசியம் வெக்கணுமா ?

Madhavan Srinivasagopalan said...

அட.. வடை எனக்குத்தானா ?
அப்ப மொய் வெச்சுத்தான் ஆகணும்டோய்..

பட்டாபட்டி.... said...

எம்பொறப்பும், முப்பொறப்பும்...
உடம்பொறப்பும்...

என்னமோ பண்ணு நாராயணா...

ஆமா...இவரு வந்தாதான் கரண்ட் பிரச்சனை தீரும்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க.. ஆமாவா?..


ஆகமொத்தம்.. நம்ம கோமணம் நம்மதில்லை...

NAAI-NAKKS said...

Yowwwwww.....
Naane....
Ulagathila ulla
ella bank-laum...
Panam pottuttu....
Vera bank....
Kidaikkaama...
Alaiuren.....

Nee vera....
Comedy....
Pannikkittu.....

By...
M.k.

ப.செல்வக்குமார் said...

நெசமாலுமே கலைஞ்சர் ஐயா எழுதிக் குடுத்ததா இது ? :))

விக்கியுலகம் said...

யோவ் இவரு தான் அந்த கல்கி அவ..தாரமா!

வெளங்காதவன் said...

//Madhavan Srinivasagopalan said...

மொய் அவசியம் வெக்கணுமா ?////அண்ணே!!
வந்து படிச்சிட்டுப் போகும்போது ஒரு ஸ்மைலியோ, இல்ல நாண்டுகிட்டு சாவுற மாதிரி ஒரு கேள்வியோ கேட்டுட்டுப் போன தேவலை!!!

ஹி ஹி ஹி

வெளங்காதவன் said...

//Blogger பட்டாபட்டி.... said...

எம்பொறப்பும், முப்பொறப்பும்...
உடம்பொறப்பும்...

என்னமோ பண்ணு நாராயணா...

ஆமா...இவரு வந்தாதான் கரண்ட் பிரச்சனை தீரும்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க.. ஆமாவா?..


ஆகமொத்தம்.. நம்ம கோமணம் நம்மதில்லை..////

யோவ் பட்டா...
இன்னிக்கு மொதலை வடிச்ச நீலிக்கண்ணீர் பாத்தியா?
பேரன் சேனலில் வந்த நூசு பாத்ததும், எனக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை உள்ள முடிகள் நட்டுக்கிச்சு!!

கர்ர் தத்து.......

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

Yowwwwww.....
Naane....
Ulagathila ulla
ella bank-laum...
Panam pottuttu....
Vera bank....
Kidaikkaama...
Alaiuren.....

Nee vera....
Comedy....
Pannikkittu.....

By...
M.k.///

இப்பத்தான்யா மனுஷன் மனசாட்சியோட பேசுறாரு!!!

விக்கியுலகம் said...

ஜி...கியா ஜி..பை ஜி...ஓகே ஜி...இப்படிக்கு இந்தி படிக்க தெரியாமல் ஜின்க்சக் அடிக்கும் தமிலன்!

வெளங்காதவன் said...

//ப.செல்வக்குமார் said...

நெசமாலுமே கலைஞ்சர் ஐயா எழுதிக் குடுத்ததா இது ? :))////

அட...ஆமாம்பா!!!

:-)

வெளங்காதவன் said...

//விக்கியுலகம் said...

யோவ் இவரு தான் அந்த கல்கி அவ..தாரமா!////

அவ..தார புருஷன்.

##நயன்தாரா புருஷன் என்று படிப்பவர்களுக்கு பதில் சொல்ல இயலாது.

:-)

வெளங்காதவன் said...

//விக்கியுலகம் said...

ஜி...கியா ஜி..பை ஜி...ஓகே ஜி...இப்படிக்கு இந்தி படிக்க தெரியாமல் ஜின்க்சக் அடிக்கும் தமிலன்!///

யோவ்.. இட்லியா இந்தியா?
சரியா வெளக்கவும்.

விக்கியுலகம் said...

இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!

வெளங்காதவன் said...

//விக்கியுலகம் said...

இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!////

சட்னியின் மீது ஆணையாகப் புரியவில்லை!!!

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லெண்ணை வாங்க ரேசன்
கடைதன்னை அடைந்தேன், அங்கு
தென்னை போல் வளர்ந்த ஒருவன் பார்த்துக் கேட்டான்
என்னை, ஐய்யா என்ன எண்ணை வேண்டுமென்று
நான் சொன்னேன்
நல்லெண்ணை நமக்குதவாது
கல்லெண்ணை கட்டுபடியாகாது
மண்ணெண்ணை இருந்தால் கொடு என்றேன்.
அதற்கு அவன் சொன்னான்,
நல்லெண்ணையும் நம்மிடமுண்டு
கல்லெண்ணையும் கடைக்குள்ளே உண்டு
பாமாயில் என்றொரு பகட்டு எண்ணையும் பலகை மீது உண்டு.
மண் அன்னை இல்லையே என்றான்...
தமிழ் மண் அன்னையை தர மறுத்த அந்த
வீரத்தமிழன் வாழ்க..

NAAI-NAKKS said...

@ pr...

Parraaaaaaa......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அது என்னுதில்ல, மயில்சாமி லக்‌ஷ்மன் மிமிக்ரி காமெடில வந்தது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!/////

அது குஷ்பூதானே?

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!/////

அது குஷ்பூதானே?///

உனக்கு ஏன்யா இட்லின்னு சொன்னாலே குஷ்பு நெனப்பு போவுது?

:-)

வெளங்காதவன் said...

தமிழ் மண் அன்னையை தர மறுத்த அந்த
வீரத்தமிழன் வாழ்க..

:-)

ரஹீம் கஸாலி said...

):

மனசாட்சி said...

ம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
இட்லிக்கு ஒரு ##பூ இருக்க...இந்தியாவுக்கு ###பூ எங்க இருந்து வந்து இருக்கு பாரும் ஹே ஹே!/////

அது குஷ்பூதானே?///

உனக்கு ஏன்யா இட்லின்னு சொன்னாலே குஷ்பு நெனப்பு போவுது?

:-)///////

தங்கத்தலைவி குஷ்பூ கையில் பாம்பு படம் எடுக்கிறது....

ராஜி said...

காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே. அப்போது நான் எழுதாத கடிதமில்லை, அனுப்பத தந்தியில்லை என்பதை கழக உடன்பிறப்பே நீயறிவாய்
>>>
அறிவோம், அறிவோம். ஆனால், பதவி வங்க தள்ளாத வயதிலும் விமானம் ஏறியதையும் அறிவோம்

வெங்கட் said...

// இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு,
வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும்
வாய்ப்பைக் கொடுக்கிறான் உன் தலைவன். //

அடடடா.. இதுவல்லவோ ஒரு தலைவருக்கு
அழகு.. வெற்றி கனி பறித்து கொடுக்க தொண்டன்.,
அதை அனுபவிக்க குடும்ப உறுப்பினர்கள்..

வீடு K.S.சுரேஸ்குமார் said...

////"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்"/////

நீர் என்ன கலைஞரா...? தெர்மாஹோல் தக்கையா....?

NAAI-NAKKS said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் அது என்னுதில்ல, மயில்சாமி லக்‌ஷ்மன் மிமிக்ரி காமெடில வந்தது......////

அதானே பார்த்தேன்...எங்க ஒரு வைரமுத்து,,கண்ணதாசன்,,இப்படி யாரவது..உங்க உடம்புல பூந்துட்டான்களோ-னு நினைச்சிட்டேன்...
பதிவு உலகம் தப்பிசுது...

முட்டாப்பையன் said...

முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் கிழிஞ்சதுதான் பாக்கி!

http://www.etakkumatakku.com/2012/03/blog-post_14.html

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சுய்யா தமிழனின் மானம் மரியாதை எல்லாம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

MANO நாஞ்சில் மனோ said...

ஒட்டு போடணுமா இல்ல போடனுமான்னு கேட்டேன் ஹி ஹி...

வெளங்காதவன்™ said...

ராஜி said...

காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே. அப்போது நான் எழுதாத கடிதமில்லை, அனுப்பத தந்தியில்லை என்பதை கழக உடன்பிறப்பே நீயறிவாய்
>>>
அறிவோம், அறிவோம். ஆனால், பதவி வங்க தள்ளாத வயதிலும் விமானம் ஏறியதையும் அறிவோம்///

மேலும், கனி பறிக்க காலில் விழுந்ததும்...
#ஹி ஹி ஹி...

வெளங்காதவன்™ said...

//வெங்கட் said...

// இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு,
வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும்
வாய்ப்பைக் கொடுக்கிறான் உன் தலைவன். //

அடடடா.. இதுவல்லவோ ஒரு தலைவருக்கு
அழகு.. வெற்றி கனி பறித்து கொடுக்க தொண்டன்.,
அதை அனுபவிக்க குடும்ப உறுப்பினர்கள்..///

அதுதான் விஞ்ஞானம், ச்சே, அரசியல்!!!

வெளங்காதவன்™ said...

//வீடு K.S.சுரேஸ்குமார் said...

////"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்"/////

நீர் என்ன கலைஞரா...? தெர்மாஹோல் தக்கையா....?//

தக்கைன்னா கார்க்கா?
#சும்மா ஒரு டவுட்டுக்கு...

வெளங்காதவன்™ said...

//MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சுய்யா தமிழனின் மானம் மரியாதை எல்லாம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

March 15, 2012 12:07 PM
Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...

ஒட்டு போடணுமா இல்ல போடனுமான்னு கேட்டேன் ஹி ஹி...////

வருகைக்கு நன்றி!!!

#மக்கா, 499ன்னா இன்னைய்யா??

வெளங்காதவன்™ said...

//ரஹீம் கஸாலி said...

):

March 13, 2012 2:36 PM
Delete
Blogger மனசாட்சி said...

ம்//
வருகைக்கு நன்றி!!!

மாலுமி said...

வெளங்கா.........வணக்கம் :)

T.N.MURALIDHARAN said...

கரண்ட் இல்லா நேரத்திலும் கடிதம் எழுதத் தூண்டியது எது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என்பதை இந்த உலகம் அறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை..............