இணைப்பில்

Monday, June 18, 2012

ஜனநாயகம்-கவுஜ!!
நான்கிற்கடுத்தே வரும்,
மையுரிமை!
காந்தி சிரிப்பில் தொலைக்கிறோம்
வாக்குரிமை!
சீமைச் சரக்குகளோடே-
சீவிய சிந்தாமணிகளும்,
சிக்கெடுத்த சிங்காரிகளும்,
சிரித்துச் சிரித்துக் கும்பிடுவர்!
பெண்டிர் எனில் மூக்குத்தி,
பெரிதாயொரு குடம், புடவைகளும்- இப்போதெல்லாம்,
ஃபுல் பாட்டில் பீரும்!
சுத்தமாகும் ரோடும்,
சுமோக்களின் பாடும்!!
ஓட்டுக்கு ஓராயிரமென காலம் மலையேறி,
ஒன்றிரண்டாகி ஒரு கட்சி பலவாகி,
பல இணைந்து ஒன்றாக்கி ஆடுவார்கள் ஆட்டம்!!!
பச்சைக்குதிரை என்று பசபசக்க நின்றிருந்து,
விரலில் மைதடவி,
ஓங்கி ஒரு குத்து வைத்து,
வெளியே வரும்போது, ஒரு பாக்கெட் பிரியாணி!
ஆனதெல்லாம் உன்கணக்கு ஐயாயிரம்!
ஐந்தாண்டு உன்பாடு திண்டாயிடும்!
விலையேற்றம், தட்டுப்பாடு, பணவீக்கம்
பலபேசி உந்தலையில் மிளகரைப்பர்!
எதுவென்னவிலை ஏற்றமாகிவிடினும்,
குவாட்டர் மட்டும்
குடித்துவிட்டு, குப்புறப்படு!15 comments:

வீடு சுரேஸ்குமார் said...

சொரிங்கோ...!கோட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கறனுங்கோ!

மனசாட்சி™ said...

யோவ் குப்புற படுக்குறது தரையிலியா மெத்தையிலா - தெளிவா சொல்லும்வோய்...அப்ப தானே தெளிய தெளிய அடிச்சிட்டு படுக்க முடியும்

மனசாட்சி™ said...

//முனைவ்வ்வர் பட்டாபட்டி//

இது என்ன குத்து

NAAI-NAKKS said...

வேற ஏதாவது புதுசா சொல்லுயா......

அப்படி.....இப்படின்னு ஏதாவது ஏற்ப்பாடு
......செய்வாங்களா.....????????????

MANO நாஞ்சில் மனோ said...

முகத்தில் அறையும், கும்மாங்குத்தும் சூப்பர்ப்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார்.......... சார்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்க தொகுதிக்கு எப்ப சார் இடைத்தேர்தல் வரும்?

வெளங்காதவன்™ said...

என்னுடைய பாஸ்வேர்டைத் திருடி பதிவிடும் திரு.பட்டாப்பட்டி அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

வெளங்காதவன்™ said...

உங்கள் கமெண்டுகளுக்கெல்லாம் இதை எழுதியவரே பதிலளிப்பார் என்பதைப் பாசத்துடன் தெரிவிக்கிறேன்!!!!

#யோவ் பட்டா, ஒழுங்கா வந்து ஒக்காந்து ஆடு!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Hahahahaha

மனசாட்சி™ said...

யோவ் இன்னும் டீ வரல

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெளங்காதவன்™ said...

உங்கள் கமெண்டுகளுக்கெல்லாம் இதை எழுதியவரே பதிலளிப்பார் என்பதைப் பாசத்துடன் தெரிவிக்கிறேன்!!!!
//

நானா(வே) எழுதியதா சார்!!!
ஹிஹி..

வெளங்காதவன்™ said...

//முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெளங்காதவன்™ said...

உங்கள் கமெண்டுகளுக்கெல்லாம் இதை எழுதியவரே பதிலளிப்பார் என்பதைப் பாசத்துடன் தெரிவிக்கிறேன்!!!!
//

நானா(வே) எழுதியதா சார்!!!
ஹிஹி..///

யோவ்... என்னோட பாஸ்வேர்டையாவது கொடுய்யா!

கோவை மு.சரளா said...

பாசை புரியாத உலகத்திற்குள் பயணித்தது போல உணர்கிறேன் .................என்ன மொழி இது தெரிந்தவர்கள் கூறவும்

வெளங்காதவன்™ said...

//கோவை மு.சரளா said...

பாசை புரியாத உலகத்திற்குள் பயணித்தது போல உணர்கிறேன் .................என்ன மொழி இது தெரிந்தவர்கள் கூறவும்///

மேடம்... நீங்க கோயமுத்தூரா?
இதை எழுதுனவரும் அதே ஊர்தான்!

எனக்கும் புரியவில்லை!

வருகைக்கு நன்னி!