இணைப்பில்

Showing posts with label வயித்தெரிச்சல்.. Show all posts
Showing posts with label வயித்தெரிச்சல்.. Show all posts

Tuesday, June 26, 2012

நாடு நாசமாப்போவட்டும்!





சோமாறி நாயுங்க!
ஒரு இந்தியப் பிரஜைய/பொருளாதாரத்தக் காப்பாத்த வக்கில்லா, இவனுங்க ஐரோப்பா பொருளாதாரத்தைக் காப்பாத்தப் போறானுங்கலாம்.

உங்களைத்தாண்டா!
ராமேசுவரத்துல இலங்கைக்காரன் சும்மா சுத்தி சுத்தி அடிக்குறான். நீங்க சுவத்துல சாஞ்சுட்டு நிக்கிறீங்களே முதுகெலும்பு இல்லாதவிங்களா..

என்னமோ போங்கடே!
இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சப்பவே உங்க கட்சிக்காரனே சொன்னான், “காங்.க கலச்சிடலாம்”னு.

எல்லாம் உங்க பாட்டன் பூட்டன் பண்ணுன விதிப்பயன், நாங்க அனுபவிக்க வேண்டியதா இருக்கு!

சத்தியமா சொல்றேன்.... உங்களுக்கு மட்டுமில்ல, உங்க வம்சமே நாசமாப் போகும்.. போயிடும்...

நீங்கெல்லாம் சேந்து மக்களையும் மக்களாட்சியையும் படுகொலை பண்ணுறீங்கடா!

-வெளங்காதவன்

Monday, June 18, 2012

ஜனநாயகம்-கவுஜ!!




நான்கிற்கடுத்தே வரும்,
மையுரிமை!
காந்தி சிரிப்பில் தொலைக்கிறோம்
வாக்குரிமை!
சீமைச் சரக்குகளோடே-
சீவிய சிந்தாமணிகளும்,
சிக்கெடுத்த சிங்காரிகளும்,
சிரித்துச் சிரித்துக் கும்பிடுவர்!
பெண்டிர் எனில் மூக்குத்தி,
பெரிதாயொரு குடம், புடவைகளும்- இப்போதெல்லாம்,
ஃபுல் பாட்டில் பீரும்!
சுத்தமாகும் ரோடும்,
சுமோக்களின் பாடும்!!
ஓட்டுக்கு ஓராயிரமென காலம் மலையேறி,
ஒன்றிரண்டாகி ஒரு கட்சி பலவாகி,
பல இணைந்து ஒன்றாக்கி ஆடுவார்கள் ஆட்டம்!!!
பச்சைக்குதிரை என்று பசபசக்க நின்றிருந்து,
விரலில் மைதடவி,
ஓங்கி ஒரு குத்து வைத்து,
வெளியே வரும்போது, ஒரு பாக்கெட் பிரியாணி!
ஆனதெல்லாம் உன்கணக்கு ஐயாயிரம்!
ஐந்தாண்டு உன்பாடு திண்டாயிடும்!
விலையேற்றம், தட்டுப்பாடு, பணவீக்கம்
பலபேசி உந்தலையில் மிளகரைப்பர்!
எதுவென்னவிலை ஏற்றமாகிவிடினும்,
குவாட்டர் மட்டும்
குடித்துவிட்டு, குப்புறப்படு!



Wednesday, January 26, 2011

இது அரசியல் பதிவல்ல!

தேர்தல் நேரம் நெருங்கிடுச்சு.....

அப்பு, வாழும் வள்ளுவரு, அம்மையார், விஜியகாந்து, டாக்டரு தம்ப்ரி, அப்புறம் சில அல்லக்கைஸ்.... இவங்க எல்லாம் நம்ம குனிய வச்சு (கு^&* அ*&^%$) குதிரை ஏற தயாராயிட்டாங்க......

மக்களே, மக்களின் மக்களே.....

வாங்க, வந்து லைன் கட்டி குனிஞ்சு நில்லுங்க..............

நான் இவிங்கள்ள யாராவது ஒருத்தருக்கு ஓட்டுப் போட ரெக்கமென்ட்பண்ணுறேன்....

வாழும் வள்ளுவரு,



சோறு தண்ணி இல்லாதவனுங்களுக்கு ஒரு ரூ”வாய்க்கு”

அரிசி போட்டு, ச்சி கொடுத்து ஓட்டு வாங்கப் போறாரு....

யாரு எவ்வளவு கொள்ளை அடிச்சிருந்தாலும் உங்களுக்கு என்ன? (ராசாசாசாசாசாசாசாசாசா)

யாரு எவ்வளவு பணம் சுவிஸ் பேங்குல போட்டு வச்சிருந்தா உங்களுக்கு என்ன?

ம்மூடிட்டு ஒழுக்கமா எல்லாரும் உதிக்கும் சின்னத்திற்கு வாக்கு அழியுங்கள்...

அம்மையார்,

இத்தனை நாள் திராட்சைத் தோட்டத்திலும், சிருதாவூரிலும் ஓய்வில் இருந்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்....

இவ்வளவு நாள் உங்க மேல குதிரை ஏறியிருந்த வள்ளுவரை எறக்கி விட்டுட்டு தான் ஏறணும்னு அடம்புடுச்சு, தேர்தல்ல முக்கிய எதிர்க்கட்சியா போட்டி போடுறாங்க.....

நம்ம வள்ளுவரு அளவுக்கு செலவு பண்ணாதுனாலும் கொஞ்சம் முன்னப் பின்ன செலவு பண்ணும்........

உடன்பிறவா சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்க இலைக்கே வாக்களிப்பீர்..

விஜியகாந்து,

என்னதான் சொல்லுங்க, இவருக்கு பெட்டி எங்க அதிகமா கிடைக்குமோ அங்கதான் போகப்போறாரு.....

கூட்டணி வச்சு, நம்ம ம#$%^ புடுங்கப்போறாரு.....

ஆனா ஒண்ணு, இவருக்கு குடிமகன்களின் கஷ்டம் மிக நன்றாய் புரியும்...

குடும்ப அரசியலை எதிர்க்கும் இவரது அரசியல் குடும்பத்துக்கு வாக்களிப்பீர்!

டாக்டரு மற்றும் அல்லக்கைஸ்,

இதுங்கெல்லாம் டம்மி பீசுங்கனாலும், முடுஞ்ச அளவுக்கு ஏதோ ஒரு மொள்ளமாரி கட்சிக்கு ஓட்டுப் போடச்சொல்லுவாங்க......

ஆதலால் வாக்காளப் பெருமக்களே,

நெறையப் பணத்த வாங்கிட்டு, தேர்தல் வரைக்கும் குஜாலா இருந்துக்குங்க...

அப்புறம் அடுத்த அஞ்சு வருஷம், வழக்கம்போல பொழம்பிட்டுத்தான் இருக்கணும்..

நாமெல்லாம் இ.வா.கூ.(நீங்க நினைக்குறமாதிரி இல்ல... இந்திய வாக்காளர்கள் கூட்டம்).

பணத்த வாங்கிட்டு, விரல்ல மைய வச்சுட்டு ஒரு குத்து குத்திட்டு, வழக்கம்போல குனுஞ்சுக்குங்க!

அடுத்ததா குதிரை ஏற ஆளுங்க ரெடி, ஏத்த நீங்க ரெடியா இ.வா.கூ.?

டிஸ்கி:- தேசியக் கட்சிகளை ரெக்கமென்ட் பண்ணுற அளவுக்கு எனக்கு பத்தாதுங்க...

--வெளங்காதவன்.